விளையாட்டு

கவாஸ்கரின் நம்பிக்கை...வலுவான ஒயிட்பால் ரெக்கார்ட்...டெஸ்ட்டிலும் சாதிப்பாரா ஹிட்மேன் ரோஹித்???

ஒயிட் பாலுக்குரிய அணுகுமுறையோடு டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடுவதால்தான் ரோஹித்தால் இங்கே ஜொலிக்க முடியவில்லை என ரோஹித் மீது விமர்சனமும் வைக்கப்பட்டது.

கவாஸ்கரின் நம்பிக்கை...வலுவான ஒயிட்பால் ரெக்கார்ட்...டெஸ்ட்டிலும் சாதிப்பாரா ஹிட்மேன் ரோஹித்???
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் ஆகச்சிறந்த ஓப்பனராக இருப்பவர் ஹிட்மேன் ரோஹித் சர்மா. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் இன்னும் பெரிதாக செட் ஆகாமல் இருக்கிறார். ரோஹித் சர்மா நிச்சயமாக சிறப்பாக ஆடுவார் என முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் சில காலம் மிடில் ஆர்டரில் ஆடிய பிறகே, ரோஹித்தை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக மாற்றினார் தோனி. ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆன பிறகே ரோஹித் ஜொலிக்க ஆரம்பித்தார். அதுவரை ஏற்ற இறக்கமாக சுமாராக ஆடிக்கொண்டிருந்தவர், ஓப்பனிங்கில் இறங்கி அதிரடி பேட்ஸ்மேனாக அசத்தினார். 2013 லிருந்து இன்று வரை இந்திய அணியின் பெரும் நம்பிக்கையாக இருக்கிறார் ரோஹித்.

ஆனால், டெஸ்ட் போட்டிகளில் நிலைமை வேறாக இருக்கிறது. ரோஹித் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான காலக்கட்டத்தில் இந்தியாவின் ஓப்பனிங் கூட்டணி செட் ஆகியிருந்ததால், அவர் மிடில் ஆர்டரில் ஆட வேண்டிய சூழலே இருந்தது. கொஞ்ச காலம் மிடில் ஓவரில் ஆடிய பிறகு இப்போதுதான் ரோஹித்துக்கு ஓப்பனிங் ஆடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கவாஸ்கரின் நம்பிக்கை...வலுவான ஒயிட்பால் ரெக்கார்ட்...டெஸ்ட்டிலும் சாதிப்பாரா ஹிட்மேன் ரோஹித்???

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவில் வைத்து நடைபெறும் போட்டிகளில் ரோஹித்தின் ஆவரேஜ் 80. ஆனால், வெளிநாட்டு மைதானங்களில் அவருடைய ஆவரேஜ் 27 மட்டுமே. இதுதான் ரோஹித்துக்கு பிரச்சனையாக இருக்கிறது. வெளிநாட்டு மைதானங்களில் ரோஹித் ஒரு பெரிய இன்னிங்ஸை ஆட தடுமாறுகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் ஓப்பனிங்கில் நின்று பெரிய இன்னிங்ஸை ஆடாமல் ஏமாற்றியிருந்தார். ஒயிட் பாலுக்குரிய அணுகுமுறையோடு டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடுவதால்தான் ரோஹித்தால் இங்கே ஜொலிக்க முடியவில்லை என ரோஹித் மீது விமர்சனமும் வைக்கப்பட்டது. மேலும், அடுத்தடுத்து மூன்று லிமிட்டெட் ஓவர் உலகக்கோப்பைகள் வரவிருப்பதால் ரோஹித் அதில் முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒதுங்க வேண்டும் போன்ற கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது.

இப்போது இந்த விமர்சனங்கள் குறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் பேசியுள்ளார். 'ரோஹித்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. இங்கிலாந்தில் உலகக்கோப்பையில் மட்டும் 5 சதங்களை அடித்துள்ளார். அதேமாதிரியான ஆட்டத்தை ரோஹித் வரவிருக்கிற இங்கிலாந்து தொடரிலும் வெளிப்படுத்துவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் வைத்து 5 டெஸ்ட் போட்டிகளில் அதவாது 10 இன்னிங்க்ஸ்களில் ஓப்பனிங் இறங்கி பேட்டிங் ஆட இருக்கிறார். இதில், கவாஸ்கர் குறிப்பிட்டதை போன்றே அந்த உலகக்கோப்பை ஃபார்மை ரோஹித் வெளிப்படுத்தியே ஆக வேண்டும். இந்த தொடரில் அவர் ஆடப்போகும் ஆட்டம் அவருடைய கரியரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே நிதர்சனம்.

banner

Related Stories

Related Stories