விளையாட்டு

ஃப்ளெம்மிங்ஸின் ஏக்கம்.. மெக்கல்லமின் கனவு.. வில்லியம்சனின் கைகளில் - அரியாசனத்தில் ஏறிய நியுசிலாந்து!

மார்ட்டின் க்ரோவின் ஏக்கம்.. ஃப்ளெம்மிங்கில் ஆசை.. மெக்கல்லமின் கனவு இப்போது வில்லியம்சனின் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.

ஃப்ளெம்மிங்ஸின் ஏக்கம்.. மெக்கல்லமின் கனவு.. வில்லியம்சனின் கைகளில் - அரியாசனத்தில் ஏறிய நியுசிலாந்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி. இந்த போட்டியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஸாக உருவெடுத்துள்ளது நியுசிலாந்து.

கடைசி நாளான நேற்று ஆட்டம் ஒரு திரில்லர் படம் போல விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் மளமளவென விக்கெட்டுகளை விட்டு சொதப்பியிருந்தது. ரிஷப் பண்ட் மட்டுமே கொஞ்சம் நேரம் நின்று அதிரடி காட்ட முற்பட்டார். ஆனால், அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இறுதியில் இந்திய அணி நியுசிலாந்துக்கு 139 என்ற டார்கெட்டை செட் செய்துவிட்டு ஆல் அவுட் ஆனது. இன்னும் ஒன்றரை செஷன் மீதமிருந்ததால் நியுசிலாந்து அணி வெல்வதற்கே அதிக வாய்ப்பிருந்தது. இந்திய அணி எதாவது மேஜிக் செய்யும், அசாத்தியங்களை நிகழ்த்தும் என்கிற நம்பிக்கையும் ஒரு ஓரமாக இருந்தது.

ஃப்ளெம்மிங்ஸின் ஏக்கம்.. மெக்கல்லமின் கனவு.. வில்லியம்சனின் கைகளில் - அரியாசனத்தில் ஏறிய நியுசிலாந்து!

நியுசிலாந்து வீரர்களும் பொறுப்பை உணர்ந்து மிகவும் பொறுமையாக ஆடினர். இதனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை. அப்போதுதான் அஷ்வினை அழைத்தார் கோலி. அஷ்வின் வந்தவுடனேயே அடுத்தடுத்து இரண்டு ஓப்பனர்களையும் வெளியேற்றினார். இதனால் இந்திய ரசிகர்கள் கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்தனர்.

இதன்பிறகு, கொஞ்சம் இந்திய அணியும் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும், அனுபவ வீரர்களான வில்லியம்சனும் ராஸ் டெய்லரும் மன உறுதியோடு அத்தனை சோதனைகளையும் எதிர்கொண்டனர். அஷ்வின் பந்துவீச்சில் வில்லியம்சனுக்கு ஒரு சில இன்ச் இடைவெளிகளில் ஒரு lbw மிஸ் ஆனது. பும்ரா பந்துவீச்சில் ராஸ் டெய்லருக்கு ஸ்லிப்பில் ஒரு கேட்ச்சை பும்ரா ட்ராப் செய்தார்.

இதெல்லாம் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்திருந்தால் போட்டி இன்னும் பரபரப்பாக்கியிருக்கும். நன்கு செட்டில் ஆகியிருந்த வில்லியம்சன், டெய்லர் கூட்டணி கடைசியில் கொஞ்சம் வேகம்காட்டி பவுண்டரிக்களை அடித்து வெற்றியை நெருங்க ஆரம்பித்தது. இறுதியாக முகமது ஷமியின் ஓவரில் ஸ்கொயர் லெகில் ஒரு பவுண்டரியை வின்னிங் ஷாட்டாக அடித்து நியுசிலாந்தை சாம்பியனாக்கினார் டெய்லர்.

ஃப்ளெம்மிங்ஸின் ஏக்கம்.. மெக்கல்லமின் கனவு.. வில்லியம்சனின் கைகளில் - அரியாசனத்தில் ஏறிய நியுசிலாந்து!

இந்திய அணியை விட ஒவ்வொரு துறையில் ஒருபடி சிறப்பாகவே செய்திருந்தது நியுசிலாந்து. அதனால் இந்த வெற்றிக்கு அவர்கள் முழுக்க முழுக்க தகுதியானவர்களே. 2019 உலகக்கோப்பையில் ஐ.சி.சியின் கோளாறான விதிமுறையால் தோற்றது நியுசிலாந்தின் நெஞ்சில் குத்திய முள்ளாக இருந்தது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி அதற்கான மருந்தாக அமைந்துள்ளது.

கடந்த சில வருடங்களாகவே நியுசிலாந்து அணி எந்த ஐ.சி.சி தொடராக இருந்தாலும் நாக் அவுட் வரை சீராக தேர்வு பெற்றிருக்கிறது. ஆனாலும் அவர்களை 'அண்டர்டாக்ஸ்' என்கிற வகைமைக்குள்ளேயே கிரிக்கெட் உலகம் வைத்திருந்தது. காரணம், அவர்களிடம் ஒரு சாம்பியன்ஸ் ட்ராஃபியை தவிர பெரிய ஐ.சி.சி கோப்பை இல்லை என்பது. ஆனால், இனிமேல் அப்படி அண்டர்டாக்ஸ் என அவர்களை கூற முடியாது.

கிரிக்கெட்டின் மிகச்சிரமமான ஒரு ஃபார்மட்டின் முதல் சாம்பியன்ஷிப்பை அவர்கள் வென்றிருக்கிறார்கள். இனிமேல் அவர்களை சாம்பியன்ஸ் என்றே அழையுங்கள். மார்ட்டின் க்ரோவின் ஏக்கம்.. ஃப்ளெம்மிங்கில் ஆசை.. மெக்கல்லமின் கனவு இப்போது வில்லியம்சனின் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள் ப்ளாக் கேப்ஸ்!

- உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories