விளையாட்டு

“இந்திய வீரர்கள் மீது 4வது முறையாக இனவெறி தாக்குதல்” : ஆட்டத்தை நிறுத்திய சிராஜ் - மன்னிப்பு கேட்டது ஆஸ்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, நான்காவது முறையாக ஆஸ்திரேலியா ரசிகர்கள் இந்திய வீரர்களை இனவெறியில் இழிவுப்படுத்தி பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இந்திய வீரர்கள் மீது 4வது முறையாக இனவெறி தாக்குதல்” : ஆட்டத்தை நிறுத்திய சிராஜ் - மன்னிப்பு கேட்டது ஆஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் கருப்பின மக்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் நடைபெற்ற black lives matter போராட்டத்திற்கு பிறகு இனவெறித் தாக்குதலை பலரும் கண்டிக்கத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் நான்காவது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, ஆஸ்திரேலியா ரசிகர்கள் இந்திய வீரர்களை இனவெறியில் இழிவுப்படுத்தி பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி டி-20, ஒரு நாள் தொடர்களையடுத்து தற்போது டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில் இருந்தே, சில ஆஸ்திரேலியா வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை இனவெறி ரீதியில் இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

“இந்திய வீரர்கள் மீது 4வது முறையாக இனவெறி தாக்குதல்” : ஆட்டத்தை நிறுத்திய சிராஜ் - மன்னிப்பு கேட்டது ஆஸ்!

இதனையடுத்து, போட்டியின் நான்காம் நாளான இன்றும் ஆஸி., ரசிகர்கள் இந்திய வீரர்களை இன ரீதியாக கிண்டல் செய்ததையடுத்து, கவனத்தை ஈர்க்கும் வகையில், ஆட்டத்தின் போது முகமது சிராஜ் தனது பவுலிங்கை நிறுத்தினார்.

இதனையடுத்து இந்திய அணி கேப்டன் ரஹானே, சிராஜிடம் பேசிய பிறகு, நடுவர்களிடம் இதுகுறித்து புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து மைதான பாதுகாப்பு அதிகாரிகள், அந்த ரசிகர்களை அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் நடுவர்களிடம் சமாதானத்திற்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய ரசிகர்களின் இனவெறி விமர்சன பேச்சு குறித்து இந்திய அணியிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மன்னிப்பு கோரியது. மேலும் இதுதொடர்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“இந்திய வீரர்கள் மீது 4வது முறையாக இனவெறி தாக்குதல்” : ஆட்டத்தை நிறுத்திய சிராஜ் - மன்னிப்பு கேட்டது ஆஸ்!

அந்த அறிக்கையில், “இனரீதியாக தாக்குதல் நடத்துபவர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஒருபோதும் அனுமதிக்காது; வரவேற்காது. தரக்குறைவாக நடந்துகொண்டவர்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டிக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னதாக நடந்த இந்த சம்பவம் குறித்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. அந்த முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்திய வீரர்களைத் திட்டியவர்கள் யார் என்று அடையாளம் தெரிந்ததும் அவர்களுக்கு நீண்ட காலம் தடை விதிப்பது, அவர்களை நியூ செளத் வேல்ஸ் மாகாண காவல்துறையிடம் ஒப்படைப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இந்த விவகாரத்தை நாங்கள் மிகவும் தீவிரத்துடன் அணுகுவோம். இச்சம்பவத்தில் ஈடுபட்டோரை கண்டறிந்து எங்களின் விதிப்படி ஆஸி மைதானங்களில் இனி அந்த நபர்களை அனுமதிக்க மாட்டோம். எங்கள் நண்பர்களான இந்திய கிரிக்கெட் அணியினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த விஷயத்தில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories