விளையாட்டு

ஆஸ். உருமாறிய கொரோனா தொற்று : பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை புறக்கணிக்க இந்திய அணி முடிவு ?

ஆஸ்திரேலியாவில் உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை புறக்கணிக்க இந்திய அணி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ். உருமாறிய கொரோனா தொற்று : பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை புறக்கணிக்க இந்திய அணி முடிவு ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஆஸ்திரேலியாவில் உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், லாக் டெளன் விதிமுறைகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது. அப்படி கெடுபிடிகள் அதிகரித்தால், பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை புறக்கணிக்க இந்திய அணி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. மூன்றாவது டெஸ்ட், சிட்னியில் ஜனவரி 7–ம் தேதி தொடங்குகிறது. இதற்காக மெல்பர்னில் இருந்து நாளை இரு அணிகளும் புறப்பட்டு சிட்னி செல்கிறது. இந்த டெஸ்ட் 11–ம் தேதி முடிவடைகிறது. அதன்பின், இரு அணிகளும் ஜனவரி 15–ம் தேதி நடைபெற இருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக பிரிஸ்பேன் செல்லவுள்ளது.

தற்போது, சிட்னி நகரம் அமைந்துள்ள நியூ செளத் வேல்ஸ் மகாணத்தின் கடற்கரையோர பகுதிகளில் உருமாறிய கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அதனால், இந்திய அணி சிட்னியில் இருந்து பிரிஸ்பேன் செல்லும்போது, அங்கு அவர்களுக்கு குவாரன்டைன் நடைமுறைகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது.

ஆஸ். உருமாறிய கொரோனா தொற்று : பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை புறக்கணிக்க இந்திய அணி முடிவு ?

'அரசு விதிக்கும் குவாரன்டைன் விதிமுறைகளை பிரிஸ்பேனில் இந்திய அணி கடைப்பிடிக்க முடியவில்லை எனில், அவர்கள் இங்கு வர வேண்டிய அவசியமில்லை' என, குயின்ஸ்லேண்ட் மாகாண அமைச்சர் டிம் மேண்டர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு இந்திய தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வீரர்கள் ஏற்கனவே, கடந்த சில மாதங்களாக, அதாவது ஐ.பி.எல் தொடங்கியதில் இருந்து குவாரன்டைனில் இருந்து, அடுத்து பங்கேற்கும் போட்டிகளில் பயோபபிள் எனப்படும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்து வருகின்றனர். இருந்தும், பிரிஸ்பேனில் மீண்டும் வீரர்களை ஹோட்டல் அறைக்குள்ளேயே அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என இந்திய அணி உணர்கிறது.

ஒருவேளை குயின்லேண்ட் மாகாண அரசு, லாக்டெளன் விதிமுறைகளில் தீவிரமாக இருக்கும் பட்சத்தில், நான்காவது டெஸ்ட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துவிடலாம் என இந்திய தரப்பில் இருந்து ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இந்திய அணி தோற்று, ஒயிட்வாஷ் ஆகும் என்றே ஆஸ்திரேலியா நினைத்தது. பதிலாக, ரஹானே தலைமையிலான இந்திய அணி அட்டகாசமாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே பெஸ்ட் கம்பேக் கொடுத்து, தொடரை 1–1 என சமன் செய்தது. அப்போதிருந்தே ஆஸ்திரேலிய ஊடகங்கள், இந்திய அணிக்கு எதிராக ஒவ்வொரு விஷயத்தையும் ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றன என்ற கருத்தும் நிலவுகிறது.

ஆஸ். உருமாறிய கொரோனா தொற்று : பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை புறக்கணிக்க இந்திய அணி முடிவு ?

கடந்த வாரம், உருமாறிய கொரோனா தொற்று தீவிரமடையத் தொடங்கியபோது, சிட்னியில் நடைபெறுவதாக இருந்த டெஸ்ட் போட்டியையும், மெல்பர்னில் நடத்தலாமா என்ற பேச்சு இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி சிட்னியிலேயே போட்டியை நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.

தற்போதுள்ள சூழலில், ஒருவேளை பிரிஸ்பேனுக்கு நுழைய முடியாதபடி விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டால், சிட்னியிலேயே கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் நடத்துவதற்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏனெனில், இந்திய அணியும் புறக்கணிப்பு முடிவை எடுத்திருப்பது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியாவது டெஸ்ட் தொடரை முழுமையாக நடத்திவிட வேண்டும் என்றுதான் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் நினைக்கும். ஏனெனில், இந்திய அணியின் இந்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் மூலம், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு 600 மில்லியின் ஆஸ்திரேலிய டாலர்கள் வருமானம் கிடைக்கும். தொடர் பாதியிலயே முடிவடைந்தால், அதிலும் பாதிப்பு ஏற்படும். தவிர, கொரோனா தாக்கம் தீவிரமாக உள்ள இங்கிலாந்து நாட்டிலேயே, கால்பந்து மட்டுமல்லாது கிரிக்கெட் போட்டிகளும் திட்டமிட்டபடி நடக்கிறது. இங்கிலாந்து அணியும், டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுவிட்டது. நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா என எல்லா நாடுகளிலும் டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, ஆஸ்திரேலியாவில் மட்டும் தொடர் பாதியில் முடிவடைவதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரும்பாது.

banner

Related Stories

Related Stories