விளையாட்டு

“நம் போராட்ட குணத்தைக் காட்ட வேண்டும் என தீர்க்கமாக இருந்தோம்” : வெற்றி ரகசியம் குறித்து ரஹானே!

அடிலெய்ட் டெஸ்ட் தோல்வியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால், எங்களை எளிதில் தோற்கடித்திருக்க முடியும். ஆனால், நாங்கள் அதைப் பற்றிச் சிந்திக்கவில்லை என ரஹானே தெரிவித்துள்ளார்.

“நம் போராட்ட குணத்தைக் காட்ட வேண்டும் என தீர்க்கமாக இருந்தோம்” : வெற்றி ரகசியம் குறித்து ரஹானே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

36 ரன்களில் ஆல் அவுட்; மோசமான ரெக்கார்டு; முதல் டெஸ்ட்டில் கேப்டனை ரன் அவுட்டாக்கிய குற்ற உணர்ச்சி; மெல்போர்ன் ஆடுகளத்தில் டாஸ் தோல்வி; விராட் இல்லை; இஷாந்த் இல்லை; ஷமி இல்லை; ஒரு பிரைம் பெளலருக்கு காயம்... இரண்டு அறிமுக வீரர்கள் வேறு... இத்தனை நெருக்கடிகள் இருந்தும் அதை எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாமல், தன் இயல்பான ஆட்டத்தை ஆடியது மட்டுமல்லாமல், தலைவனாகவும் முன்மாதிரியாக நின்று, ஆட்ட நாயகனாக ஜொலித்திருக்கிறார் அஜிங்கிய ரஹானே... எப்படி சாத்தியமானது இந்த வெற்றி... இதோ அவரே சொல்கிறார்;

"அடிலெய்ட் டெஸ்ட் தோல்வியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால், எங்களை எளிதில் தோற்கடித்திருக்க முடியும். ஆனால், நாங்கள் அதைப் பற்றி சிந்திக்கவில்லை. கம்பேக் கொடுக்க வேண்டும், நம் போராட்ட குணத்தைக் காண்பிக்க வேண்டும் என தீர்க்கமாக இருந்தோம். தனிநபர்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்பதே, இந்த டெஸ்ட் மேட்ச் வெற்றி சொல்லும் மெசேஜ். எங்களுக்குத் தெரியும், இந்த வெற்றி சாத்தியப்படக்கூடியதே என்று!

நாங்கள் முதலில் பேட் செய்யவே விரும்பினோம். ஆனால், எங்கள் பெளலர்கள் கட்டுக்கோப்புடன் அட்டகாசமாக வீசினர். குறிப்பாக, அஷ்வின் பத்தாவது ஓவரிலேயே அற்புதமாக வீசி, எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார்.

“நம் போராட்ட குணத்தைக் காட்ட வேண்டும் என தீர்க்கமாக இருந்தோம்” : வெற்றி ரகசியம் குறித்து ரஹானே!

தங்கள் முதல் போட்டியில் களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் கலக்கிவிட்டனர். மூன்று நான்கு ஆண்டுகள் முதல் தர கிரிக்கெட், இந்தியா ஏ அணிகளில் விளையாடிய அனுபவம் அவர்களுக்கு ரொம்பவே கைகொடுத்தது. ஃபர்ஸ் கிளாஸ் கிரிக்கெட்டுக்கு கிடைத்த வெற்றி இது. முகமது சிராஜ் கட்டுக்கோப்புடன், பொறுமையாக சூழலைப் புரிந்து பந்துவீசியதைப் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது. அவர் தன் கேரக்டரை வெளிப்படுத்திய விதம் அருமை.

துரதிர்ஷ்டவசமாக உமேஷ் யாதவ் காயமடைந்துவிட்டார். ஆனால், ஒட்டுமொத்த வீரர்களும் பாராட்டுக்குத் தகுதியுடையவர்கள். ஐந்து பெளலர்களுடன் விளையாட வேண்டும் என்ற முடிவுக்கு பலன் கிடைத்துள்ளது. ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தன் பங்கை சிறப்பாக செய்துவிட்டார். சுப்மன் கில் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் ஜொலித்துள்ளார். அவரும் நெருக்கடியான தருணத்தில் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சில நேரங்களில் அறிமுகப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மீது நெருக்கடி இருக்கும், அதனால் சொதப்ப வாய்ப்பிருக்கும். ஆனால், இவர்கள் நீண்ட நாள்களாக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியிருந்ததால், அந்த அனுபவத்தில் நெருக்கடியான சூழலை சமாளிப்பதில் அவர்களுக்கு சிரமம் இல்லை. கேப்டனின் பணியும் எளிதாகிவிட்டது.

“நம் போராட்ட குணத்தைக் காட்ட வேண்டும் என தீர்க்கமாக இருந்தோம்” : வெற்றி ரகசியம் குறித்து ரஹானே!

இந்த டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, நாம் யார் என்பதக் களத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்ற பேசியிருந்தோம். ஏனெனில், ஒரு மணி நேரத்தில் அடிலெய்ட் டெஸ்ட்டில் ரிசல்ட் எங்களுக்கு பாதகமாக மாறிவிட்டடது. இப்போதும், நாங்கள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

உமேஷ் யாதவ் காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். ரோஹித் ஷர்மாவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம். நேற்றுதான் அவரிடம் பேசினோம். அவரும் கம்பேக் கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார்." என்றார் ரஹானே. ஆஸி கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில், "இந்தத் தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் மோசமான கிரிக்கெட் விளையாடி தோற்றுவிட்டோம்.

இந்தியாவிடம் இருந்து எங்களால் எதையும் தட்டிப் பறிக்க முடியவில்லை. அவர்கள் எங்களை தவறுசெய்ய பணித்துவிட்டனர். அவர்கள் அட்டகாசமாக பெளலிங் செய்தனர். நாங்கள் நினைத்தமாதிரி விளையாடவில்லை. எங்கள் பேட்டிங் யுனிட் சொதப்பியது ஏமாற்றமாக இருக்கிறது. இருந்தாலும், இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருக்கிறது. அதில் வெற்றிபெற கடுமையாக முயற்சிப்போம்." என்றார்.

banner

Related Stories

Related Stories