தமிழ்நாடு

“உலகின் தலைசிறந்த சொல் ‘செயல்’ - அது ரஹானேவுக்கு 100% பொருந்திப்போகும்” : வாழ்த்துகள் ரஹானே!

அமைதியாக இருந்து கொண்டு, செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து, மோசமான தோல்வியின் சுவடே தெரியாமல் மீட்டு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கிறார் ரஹானே.

“உலகின் தலைசிறந்த சொல் ‘செயல்’ - அது ரஹானேவுக்கு 100% பொருந்திப்போகும்” : வாழ்த்துகள் ரஹானே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்திய அணியின் டெஸ்ட் வெற்றிகளிலேயே மிகப்பெரிய வெற்றியாக மிகவும் போற்றத்தக்க வெற்றியாக இதை குறிப்பிடலாம். ஒரு அணியாக அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெற செய்திருந்தாலும், கேப்டன் ரஹானேவுக்கு தனிப்பட்ட முறையில் இந்த வெற்றியில் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ரஹானே எப்படி இந்த வெற்றியை சாத்தியப்படுத்தினார்? ஏன் இந்த வெற்றி போற்றத்தக்கது?

இந்திய அணி 2018 ல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றிருந்தாலும், அப்போதைய ஆஸ்திரேலிய அணி முழுபலத்துடன் இல்லை என்பதுதான் உண்மை. மனரீதியாகவும் அவர்கள் வழக்கமாக வெளிப்படுத்தும் ஆதிக்ககுணம் அவர்களிடம் வெளிப்பட்டிருக்கவில்லை. அதனால், இந்திய அணி வரலாற்றில் முதல்முறையாக ஆஸியில் டெஸ்ட் தொடரை வென்றிருந்தாலும், அது ஒரு முழுமையான வெற்றியாக பார்க்கப்படவில்லை.

இந்த முறைதான் ஆஸ்திரேலிய அணி கொஞ்சமேனும் தனது பழைய பலத்தை மீட்டெடுத்து இந்தியாவுக்கு சவாலளிக்கும் வகையில் இருந்தது. ஸ்மித் இருக்கிறார்... லபுஷேன் இருக்கிறார்... பெய்ன் தலைமையில் ஒரு அணியாக முன்பை விட சிறப்பாக செயல்பட தொடங்கியிருந்தனர். இந்நிலையில்தான், இந்த பார்டர் கவாஸ்கர் தொடர் தொடங்கியது. கோலி தலைமையில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே மிக மோசமாக 36 ரன்னில் ஆல் அவுட் ஆகி இந்திய அணி தோல்வியை தழுவியது. ஏற்கனவே, 'இந்தியா இந்த சீரிஸில் ஒயிட் வாஷ் ஆகும்' என ஆருடம் சொன்னவர்கள், இன்னும் அதிக எனர்ஜியுடன் இந்திய அணியை விமர்சனங்களால் தாக்க ஆரம்பித்தனர்.

“உலகின் தலைசிறந்த சொல் ‘செயல்’ - அது ரஹானேவுக்கு 100% பொருந்திப்போகும்” : வாழ்த்துகள் ரஹானே!

கோலியும் இந்தியாவுக்கு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியா இந்த சீரிஸை 4-0 என அடித்துவிடும் என்பதே பலரின் கணிப்பாகவும் இருந்தது. இந்நிலையில்தான் ரஹானே கேப்டனாக பதவியேற்றார். ஃபார்மிலேயே இல்லாத ஒரு வீரர் கேப்டனா? ரஹானே தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவாரா, அணியை வழிநடத்துவாரா? அணிக்குள் அத்தனை பிரச்னைகள் இருக்கிறதே, அத்தனையையும் ரஹானேவால் சமாளிக்க முடியுமா? கோலி இல்லை... ரோஹித் இல்லை... ஷமி இல்லை... இஷாந்த் இல்லை... ரஹானே மட்டும் இருந்து என்ன செய்ய முடியும்? இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகள் ரஹானே முன் மலைபோல் நின்றது.

நரம்புப்புடைக்க ஆஸிக்கு ஒவ்வொரு முறை பதிலடி கொடுக்கும் கோலியின் அணியையே 36 ரன்னில் ஆல் அவுட் ஆக்கிவிட்ட நிலையில், இருக்கிற இடம் தெரியாமல் இருக்கும் ரஹானேவின் அணியை கொஞ்சம் ஏளனமாகத்தான் ஆஸியினர் பார்த்திருப்பர். ப்ளேயிங் லெவனிலேயே பாதி அணியை அப்படியே மாற்ற வேண்டியிருந்தது. ஓப்பனராக ஒரு அறிமுக வீரர், முக்கிய வேகப்பந்து வீச்சாளராக ஒரு அறிமுக வீரர் என அணியே கொஞ்சம் ஆட்டம் கண்டிருந்தது. ஆனால், அத்தனைக்கும் சேர்த்து வைத்து முதல் நாளிலேயே பதிலடி கொடுத்தார் ரஹானே.

தனக்கு இருக்கிற வாய்ப்புகளை வைத்து கிடைக்கிற கேப்பிலெல்லாம் ஆஸியின் ட்ரெஸ்ஸிங் ரூமை சர்ப்ரைஸ் செய்து கொண்டே இருந்தார். ரெட் பால் ஸ்பெசலிஸ்ட் ஆன அறிமுக வீரர் சிராஜை ஆஸியினர் முதல் செஷனிலே எதிர்பார்த்து காத்திருந்தனர். பும்ரா மற்றும் உமேஷ் யாதவை பார்த்து ஆடிவிட்டு சிராஜின் ஓவர்களை ரன்களை உயர்த்த பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது ஆஸியின் ப்ளானாக இருந்திருக்கும். ஆனால், ரஹானேவோ சிராஜை முதல் செஷனில் பந்து வீச அழைக்கவே இல்லை. மாறாக, இரண்டாவது செஷனில் வீச வேண்டிய அஸ்வினை கூப்பிட்டு11வது ஓவரை வீசவைத்தார்.

“உலகின் தலைசிறந்த சொல் ‘செயல்’ - அது ரஹானேவுக்கு 100% பொருந்திப்போகும்” : வாழ்த்துகள் ரஹானே!

அஸ்வினும் ஆஸியின் முதுகெலும்பான ஸ்மித்தை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார். இது ஆஸிக்கு ரஹானே கொடுத்த பெரிய அடி. சிராஜை இரண்டாவது செஷனில் அறிமுகப்படுத்தி ப்ரஷர் இல்லாமல் அவரையும் விக்கெட் எடுக்க வைத்தார். 'ஒரு வேளை இந்திய அணி முதல் செஷனில் விக்கெட் எடுக்காமல் ஆஸிக்கு 80-90 ரன்களை கொடுத்திருந்தால் அங்கேயே மொத்த நெகட்டிவிடியும் இந்தியாவை சூழ ஆரம்பித்திருக்கும். அடிலெய்டு ஞாபகம் வந்து தோல்வியைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்திருப்போம்' என இந்த முதல் செஷன் குறித்து கவாஸ்கர் கூறியதிலிருந்து ரஹானே இந்த முதல் செஷனை இவ்வளவு சர்ப்ரைஸ்களோடு அணுகியது எவ்வளவு முக்கியமாக அமைந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

கோலி இல்லை... ஷமி இல்லை... இஷாந்த் இல்லை என இழுத்து சொல்வதற்குள்ளேயே ஆஸியை 195 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கி கெத்து காட்டினார்.

ஒரு கேப்டனாக தன்னை முதல் நாளிலேயே நிரூபித்துவிட்ட ரஹானே, இரண்டாவது நாளில் பேட்ஸ்மேனாகவும் தன்னுடைய ஃபார்மை மீட்டுக்கொண்டார். ஹனுமா விஹாரி, பண்ட், ஜடேஜா ஆகியோருடன் நின்று இவர் போட்ட பார்ட்னர்ஷிப்கள்தான் இந்திய அணியை லீட் எடுக்க வைத்தது. ரஹானேவின் அந்த சதம்தான் இந்திய அணி வெல்வதற்கு காரணமாக அமைந்தது.

இந்த போட்டிக்கு முன்பாகவே ப்ரஸ் மீட்டில் 'ஆஸியினர் நிறைய மைண்ட் கேம் ஆடுவார்கள் என எனக்கு தெரியும். ஆனால், நாங்கள் அதிலெல்லாம் கவனம் செலுத்தமாட்டோம். எங்கள் திறனை எப்படி முழுமையாக வெளிப்படுத்துவது என்பதில்தான் கவனம் செலுத்துவோம்' என கூறியிருந்தார். ரஹானே ஆஸியினர் பற்றி கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. இந்திய 36 ரன்களில் ஆல் அவுட் ஆன அழுத்தத்திலேயே இருக்கும், அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுமே ஆஸியின் ஒரு ப்ளான்தான். 'இந்திய அணி அந்த 36 ஐ நினைத்து அழுத்தத்தோடு களமிறங்கினால், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.' என ஆஸியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பேட்டி கொடுத்திருந்தார்.

“உலகின் தலைசிறந்த சொல் ‘செயல்’ - அது ரஹானேவுக்கு 100% பொருந்திப்போகும்” : வாழ்த்துகள் ரஹானே!

ஆனால், ரஹானேவோ எந்த இடத்திலும் தாங்கள் அந்த தோல்வியினால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தவே இல்லை. அடிலெய்டில் நடந்தது அடிலெய்டில் அன்றைய நாளோடு முடிந்துவிட்டது. இது மெல்பர்னில் நடக்கும் இன்னொரு போட்டியின் இன்னொரு புதுநாள். இங்கே அந்த தோல்வியை நினைத்து வருந்துவதில் எந்த ப்ரயோஜனமும் இல்லை என்கிற எண்ணம் மட்டுமே ரஹானேவுக்கு இருந்தது. இந்த எண்ணத்தைதான் ஒட்டுமொத்த அணிக்கும் ரஹானே கடத்தினார். சக வீரர்களுக்கு எந்த அழுத்தமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

சிராஜ் ஒவ்வொரு முறை பேட்ஸ்மேனின் காலில் பந்து படும்போதும் ரஹானேவை ரிவியூ எடுக்க சொல்வார். ரஹானேவுக்கு அந்த ரிவியூவுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், சிராஜின் நம்பிக்கைக்காக சில ரிவியூவ்களையும் எடுத்து அவருக்கும் எனர்ஜியூட்டியிருப்பார். ஒரு கட்டத்துக்கு பிறகு, ரொம்பவே பக்குவமாக அவுட் இல்லை என்பதை சிராஜுக்கு சொல்லி ரிவியூவ்களை தவிர்க்க தொடங்கி, தனது ஆளுமையையும் காட்டியிருப்பார். அதேமாதிரிதான் முதல் இன்னிங்ஸில் ரஹானேவை ஜடேஜா ரன் அவுட் ஆக்கிவிட்ட போதும் ஜடேஜாவை தட்டிக்கொடுத்துவிட்டு Carry on என்று சொல்லிவிட்டு சென்றிருப்பார்.

அக்ரஷன்... அட்டாக்கிங் என்பவை முகத்தில் வெளிப்படுத்த வேண்டிய விஷயமில்லை... ஃபீல்டில் வெளிப்படுத்த வேண்டிய விஷயம் என்பதையும் நேர்த்தியாக புரிய வைத்தார். ரஹானே ஃபீல்ட் செட்டப்பிலும் பௌலிங் சேஞ்சிலும் காட்டிய அக்ரஷனை ஆஸி கேப்டன் பெய்ன் காட்டவில்லை என்பதும் ஆஸ்திரேலியா தோல்வியுற மிக முக்கிய காரணமாக அமைந்தது.

“உலகின் தலைசிறந்த சொல் ‘செயல்’ - அது ரஹானேவுக்கு 100% பொருந்திப்போகும்” : வாழ்த்துகள் ரஹானே!

2018–ல் இந்தியா ஆஸிக்கு சென்றபோது அந்த ஒட்டுமொத்த சீரிஸிக்குமே சேர்த்து இந்தியாவுக்கு இந்தளவுக்கு ப்ரஷர் இல்லை. ஏனெனில், இந்தியாவின் கைதான் அப்போது ஓங்கியிருந்தது. ஆனால், இங்கே ஒரு வரலாற்று மோசமான தோல்வியை அடைந்துவிட்ட பிறகு, இந்தியா மீது அத்தனை அழுத்தங்கள். இந்த சீரிஸை தோற்றால், இந்திய அணியிலேயே பல எதிர்பாராத மாற்றங்கள் நிகழும் என்ற அளவுக்கெல்லாம் கணிப்புகள் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேல் தலைக்கு மேல் கத்தியாக ரஹானேவுக்கு மோசமான ஃபார்மால் அவரது கெரியரே கேள்விக்குள்ளாகியிருந்தது. இது அத்தனையும் தாண்டி ரஹானே வென்றிருக்கிறார்.

'உலகின் தலைசிறந்த சொல் செயல்' என ஒரு திரைப்பட வசனம் உண்டு. அது ரஹானேவுக்கு 100% பொருந்திப்போகும். அமைதியாக இருந்து கொண்டு, செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து, மோசமான தோல்வியின் சுவடே தெரியாமல் மீட்டு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கிறார்.

வாழ்த்துகள் ரஹானே!

banner

Related Stories

Related Stories