விளையாட்டு

பல்வேறு இன்னல்களுக்கு இடையே பயிற்சியை தொடங்கியுள்ள சி.எஸ்.கே வீரர்கள் - வீடியோ வெளியீடு!

முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும் சி.எஸ்.கே அணி, போட்டிக்கு தயாராகும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு இன்னல்களுக்கு இடையே பயிற்சியை தொடங்கியுள்ள சி.எஸ்.கே வீரர்கள் - வீடியோ வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குப் பிரச்சனைகள் என்பது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இந்த ஆண்டும் அந்த அணியின் பணியாளர்கள் மற்றும் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பயிற்சியில் ஈடுபடமுடியாமல் முடங்கியிருந்தனர்.

அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ‘சின்ன தல’ என்றழைக்கப்படும் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் ஐ.பி.எல் தொடரிலிருந்தே வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் பின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் தொடரிலிருந்து விலகினார்.

இந்நிலையில், ஐ.பி.எல் லீக் போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி முதல் போட்டி 19-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தொடர்ந்து பிரச்சனைகளையே கேட்டு வந்த ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கேப்டன் தோனி, ஷேன் வாட்ஸன், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

அத்தனை அணிகளும் பயிற்சியைத் தொடங்கி சில நாட்களுக்குப் பின்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாகப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் சி.எஸ்.கே வீரர்கள் ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகளும், தீபக் சாஹர், ஜடேஜா, பியூஷ் சாவ்லா உள்ளிட்டோர் பந்துவீச்சு பயிற்சி செய்யும் காட்சிகளும், தோனி பேட்டிங் மற்றும் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

banner

Related Stories

Related Stories