விளையாட்டு

IND vs NZ டெஸ்ட்: இந்தியாவை பந்தாடிய நியூசிலாந்து - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி முதல் தோல்வி!

ஒருநாள் போட்டியை தொடர்ந்து டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி இந்திய கிரிக்கெட் அணி ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ளது.

IND vs NZ டெஸ்ட்: இந்தியாவை பந்தாடிய நியூசிலாந்து - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி முதல் தோல்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட் சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 242 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. ப்ரித்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

பின்னர் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டாம் லாதம் மட்டும் அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள், இந்திய பந்து வீச்சாளர்களிடம் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.

IND vs NZ டெஸ்ட்: இந்தியாவை பந்தாடிய நியூசிலாந்து - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி முதல் தோல்வி!

7 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் ஆடிய இந்தியா, சொதப்பல் பேட்டிங்கை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்கள் தொடங்கி கடைசி வரிசை வீரர் வரை வந்த வேகத்திலேயே பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினர். ஒரு வீரர் கூட 30 ரன்களை எட்டவில்லை. மிகவும் மோசமாக விளையாடியதால், இந்திய அணி 2வது இன்னிங்சில் 124 ரன்னில் சுருண்டது.

132 ரன்கள் இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது. தொடக்க வீரர்கள் டாம் லாதம், டாம் ப்ளண்டெல் இருவரும் அரைசதம் அடிக்க, நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழந்து எளிதாக இலக்கை எட்டியது.

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றி இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது. டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகனாக ஜேமிசனும், தொடர் நாயகனாக டிம் சோதி-யும் தேர்வாகினர்.

முன்னதாக 5 T20 போட்டித் தொடரை 5-0 என இந்தியா வென்றிருந்தது. அதன் பின் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டி தொடரில் 3-0 என நியூசிலாந்து வெற்றி பெற்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.

ஒருநாள் தொடரை தொடர்ந்து டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்யப்பட்டுள்ளது. தவிர, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சந்தித்த முதல் தொடர் தோல்வி இதுவாகும்.

banner

Related Stories

Related Stories