விளையாட்டு

“அன்று நீ... இன்று நான்” : கோலியை பழிதீர்த்த நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன்!

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 11 ஆண்டு கழித்துப் பழிதீர்த்துக் கொண்டுள்ளார்.

“அன்று நீ... இன்று நான்” : கோலியை பழிதீர்த்த நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விடைடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 11 ஆண்டு கழித்துப் பழிதீர்த்துக் கொண்டுள்ளார்.

கடந்த 2008ல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டியில் இளம் வீரர்களாக விராட் கோலி - கேன் வில்லியம்சன் தத்தம் அணிகளுக்கு தலைமை ஏற்று வழிநடத்தினர்.

அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 2௦5 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பேட்டிங்கின்போது மழை குறுக்கிட்டு பின்னர் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இந்திய அணி வெற்றி பெற்றது.

U19 World Cup 2008 vs World cup 2019
U19 World Cup 2008 vs World cup 2019

தற்போதைய அரையிறுதி ஆட்டத்திலும் மழை காரணமாக அடுத்த நாளுக்கு போட்டி தள்ளி வைக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்றது. நியூசிலாந்து நிர்ணயித்த இலக்கை விரட்டிய இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து, உலகக்கோப்பை அரங்கில் கேன் வில்லியம்சன், விராட் கோலியை வீழ்த்தி தனது பழைய தோல்விக்குப் பழிதீர்த்துக் கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories