விளையாட்டு

"கண்ணாடிய திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்..?" - RCBஐ கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்ஸ்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற அணியின் பெயரை மாற்றுவதாக அறிவித்ததை அடுத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

"கண்ணாடிய திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்..?" - RCBஐ கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வருகிற மார்ச் 29ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏலம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. கோப்பையை வெல்லும் முனைப்பில் 8 அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் கோப்பையை வெல்லாத பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் போன்ற அணிகள் இந்த முறையாவது கப்பை ஜெயித்துவிட வேண்டும் என கங்கனம் கட்டி வருகின்றன.

அதில், பெங்களூரு அணி புதுமையான உத்தியில் ஈடுபட்டிருக்கிறது. என்னவெனில், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் என இருந்த பெயரை சன்ரைசஸ் ஹைதராபாத் என மாற்றி கடந்த 2016ம் ஆண்டு பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐ.பி.எல் கோப்பையை வென்றது.

அணியின் பெயரை மாற்றியது ஹைதராபாத் அணிக்கு வேலை செய்ததைப் போல, நடப்பாண்டில் கோப்பை வெல்வதற்காக அதே டெக்னிக்கை பெங்களூரு அணி பின்பற்றி உள்ளது. அதற்காக சமூக வலைதளங்களில் உள்ள லோகோவை எடுத்துள்ளது. மேலும், பழைய பதிவுகளையும் மறைத்து வைத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற பெயரை வெறும் ராயல் சேலஞ்சர்ஸ் தற்காலிகமாக மாற்றியுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடவுள்ளதாகவும் அந்த அணி தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அணியின் கேப்டனான எனக்கே இதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை என விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இருப்பினும், பெங்களூரு அணியின் இந்த மாற்றங்களை கிரிக்கெட் ரசிகர்கள் கலாய்த்துத் தள்ளி, மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories