விளையாட்டு

“ஆல் ஸ்டார் போட்டி, நோ பால் நடுவர்” : புதுப்புது விதிகளுடன் அறிவிக்கப்பட்ட IPL 2020 !

நடப்பாண்டிற்கான IPL கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது. ரசிகர்களை தொலைக்காட்சி முன்பே அமரவைக்கும் கிரிக்கெட் திருவிழா களைகட்ட காத்திருக்கிறது.

“ஆல் ஸ்டார் போட்டி, நோ பால் நடுவர்” : புதுப்புது விதிகளுடன் அறிவிக்கப்பட்ட IPL 2020 !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆண்டுதோறும் சம்மர் சீசனில் ரசிகர்களை கட்டிப்போடும் IPL திருவிழா நடப்பாண்டு மார்ச் 29ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை களைகட்டவிருக்கிறது. ஐ.பி.எல் தொடர் தொடர்பான இந்தியன் ப்ரீமியர் லீக் கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் நடப்பாண்டிற்கான ஐ.பி.எல் தொடர் குறித்து பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டன.

முடிவில், 13வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடப்பாண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டி அரைமணி நேரத்திற்கு முன்பாக அதாவது 7.30 மணிக்கு தொடங்குவது குறித்து பேசப்பட்டது.

“ஆல் ஸ்டார் போட்டி, நோ பால் நடுவர்” : புதுப்புது விதிகளுடன் அறிவிக்கப்பட்ட IPL 2020 !

எனினும், போட்டிகள் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இரவு போட்டிகள் 8 மணிக்கு தான் தொடங்கும் என்றும், 5 நாட்கள் மட்டுமேஒரு நாளில் இரண்டு போட்டிகள் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், அவை மாலை 4 மணி, இரவு 8 மணிக்கும் நடத்தப்படும் என்றும் BCCI தலைவர் சவுரவ் கங்குலி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இறுதிப்போட்டி அரங்கேறும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தவிர, வீரர்களுக்குச் சாதகமாக விதிமுறைகளும் மாற்றப்பட்டுள்ளன. போட்டியின் போது, பந்துவீச்சாளர் வீசும் பந்து பேட்ஸ்மேன் தலையில் தாக்கி காயமடையும் பட்சத்தில் அந்த வீரருக்குப் பதில் மாற்று வீரரை களமிறக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார். மேலும், நோ-பாலை ஆடுகள நடுவருக்கு பதிலாக 3வது நடுவர் முடிவு செய்யும் புதிய விதிமுறையும் இந்த சீசனில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

“ஆல் ஸ்டார் போட்டி, நோ பால் நடுவர்” : புதுப்புது விதிகளுடன் அறிவிக்கப்பட்ட IPL 2020 !

ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் நல நிதி கிரிக்கெட் போட்டி நடத்தப்டவுள்ளது. இந்தப் போட்டி நடைபெறும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும் கங்குலி தெரிவித்தார்.

ஐ.பி.எல் திருவிழாவுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், இப்போதிருந்தே தொடரை எதிர்நோக்கி காத்துள்ளனர் ரசிகர்கள்.

banner

Related Stories

Related Stories