விளையாட்டு

பானிபூரி விற்று கிரிக்கெட் கற்ற சிறுவனை 2.40 கோடிக்கு ஏலம் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் : சாதிப்பாரா யாஷஸ்வி?

வறுமையின் காரணமாக பானிபூரி விற்ற சிறுவன் இன்று ஐ.பி.எல் 2019 கிரிக்கெட் தொடரில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

பானிபூரி விற்று கிரிக்கெட் கற்ற சிறுவனை 2.40 கோடிக்கு ஏலம் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் : சாதிப்பாரா யாஷஸ்வி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

IPL 2019 தொடருக்கான ஏலம் நேற்று (டிச.,19) கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில், 62 வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர். அவர்களில் 29 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

அவற்றில் கோடிகளில் விலை போன வீரர்களும் ஏராளம். அப்படி ராஜஸ்தான் அணிக்கு கோடிகளில் விலைபோன இளம் வீரர்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வரும், 17 வயதான யாஷஸ்வி ஜெய்ஸ்வால். 2.40 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வாலை ஏலத்தில் எடுத்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்ஸ்வால் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட்டின் மீது அதீத காதல் கொண்டதால் எப்படியாவது தன்னுடைய திறமையை அதில் வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தனது தந்தையுடன் மும்பைக்கு குடி பெயர்ந்திருக்கிறார்.

ஆனால் தொடக்கத்தில் அவருக்கு எந்த உதவியும் கிடைத்துவிடவில்லை. ஒரு மாதத்திற்கு பிறகு தந்தை ஊருக்கு சென்றதும் மும்பையில் குழந்தைகளுக்கான அசாத் மைதான் விளையாட்டு மைதானத்துக்கு வந்து சேர்ந்துள்ளார் ஜெய்ஸ்வால். இம்ரான் என்பவருடன் அறிமுகமானவருக்கு மைதானத்தில் பணிபுரிபவர்களின் குடிலில் தங்க அனுமதி கிடைத்துள்ளது.

கழிவறை, மின்சாரம் என எந்த வசதியும் இல்லாமல் குடிலில் தங்கிக்கொண்டே கிரிக்கெட் பயிற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். தந்தை அனுப்பும் காசு போதாததால், இரவு நேரங்களில் பானி பூரி விற்று அதில் வரும் பணத்தின் மூலம் தனக்கான தேவைகளை அவ்வப்போது பூர்த்தி செய்துக்கொள்ளத் தொடங்கி இருக்கிறார். இதில் பல நாட்கள் இரவு உணவு இல்லாமல் கூட வாழ பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 2015ம் ஆண்டு நடைபெற்ற Gills Shield கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டியில் முச்சதம் (319) அடித்து விளாசினார். அடுத்தபடியாக விஜய் ஹசாரே போட்டியில் 154 பந்துகளில் 203 ரன்கள் குவித்தார் ஜெய்ஸ்வால். இதன் மூலம் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார் ஜெய்ஸ்வால்.

பானிபூரி விற்று கிரிக்கெட் கற்ற சிறுவனை 2.40 கோடிக்கு ஏலம் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் : சாதிப்பாரா யாஷஸ்வி?

இதனையடுத்து இந்திய அணியின் Under 19 அணியில் விளையாட இடம் கிடைத்ததோடு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.

இந்நிலையில் 2020ம் ஆண்டுக்கான IPL போட்டியில் விளையாட ராஜஸ்தான் அணி இவரை ரூ.2.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இப்போது தேசிய அளவில் பிரபலமடைந்துள்ளதோடு, பலர் ஜெய்ஸ்வாலுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories