விளையாட்டு

2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ODI: அனல் பறக்குமா ஆட்டம்?- முன்கூட்டியே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்!

சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்களைக் காண குவிந்த ரசிகர்கள் கூட்டம்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ODI: அனல் பறக்குமா ஆட்டம்?- முன்கூட்டியே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 T20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 T20 போட்டிகள் கொண்ட தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (டிச., 15) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதற்காக, நேற்றைய தினம் சென்னை வந்தடைந்த இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை மேற்கிந்திய தீவுகள் அணியினரும், மாலை இந்திய அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர். சென்னையில் போட்டி நடைபெறுவதால், ரசிகர்கள் அனைவரும் மிக ஆவலுடன் இந்தப் போட்டியை எதிர்நோக்கியுள்ளனர்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ODI: அனல் பறக்குமா ஆட்டம்?- முன்கூட்டியே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்!

முன்னதாக 2017ம் ஆண்டு சென்னையில் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தியா-ஆஸ்திரேலியா விளையாடிய அந்தப் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

2 ஆண்டுகளுக்குப் பின் சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள நிலையில், வெகு விரைவில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்துள்ளன. மேலும், இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories