விளையாட்டு

“ஒரே ஆட்டம்; பல சாதனைகள்” : வெஸ்ட் இண்டீஸை துவம்சம் செய்த இந்திய அணி!

நேற்றைய போட்டியில் இந்திய அணி வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

“ஒரே ஆட்டம்; பல சாதனைகள்” : வெஸ்ட் இண்டீஸை துவம்சம் செய்த இந்திய அணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கடைசி T20 போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிரடி காட்டினார். இருவரின் அதிரடியால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 91 (56) ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 70 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

“ஒரே ஆட்டம்; பல சாதனைகள்” : வெஸ்ட் இண்டீஸை துவம்சம் செய்த இந்திய அணி!

பின்னர் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணி 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.

பின்னர் ஜோடி சேர்ந்த பொல்லார்ட் மற்றும் ஹெட்மயர் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிரடியாக விளையாடிய ஹெட்மயர் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து போராடிய பொல்லார்ட் 68 ரன்களில் அவுட் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ராகுல் ஆட்டநாயகனாகவும், விராட் கோலி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

“ஒரே ஆட்டம்; பல சாதனைகள்” : வெஸ்ட் இண்டீஸை துவம்சம் செய்த இந்திய அணி!

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ரோஹித் ஷர்மா (71), கே.எல்.ராகுல் (91), கோலி (70*) ஆகிய மூன்று வீரர்களும் 70 ரன்களுக்கு மேல் அடித்தனர். இதன் மூலம் சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் மூன்று பேட்ஸ்மேன்கள் 70 ரன்களுக்கு மேல் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் ரோஹித் சர்மா சிக்ஸர் விளாசினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டினார். அது அவர் சர்வதேச அளவில் அடித்த 400-வது சிக்ஸர் ஆகும். மிகக்குறைவான போட்டிகளில் 400-வது சிக்ஸரை அடித்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

“ஒரே ஆட்டம்; பல சாதனைகள்” : வெஸ்ட் இண்டீஸை துவம்சம் செய்த இந்திய அணி!

இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் 70 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய மண்ணில் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களை குவித்துள்ளார். இந்தச் சாதனையைப் படைத்த முதல் இந்தியரும், மூன்றாவது வீரரும் ஆவர்.

நேற்றைய போட்டியில் விராட் கோலி 21 பந்தில் அரைசதம் கடந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய கேப்டன் என்ற பெருமை பெற்றார் கோலி. மேலும், சர்வதேச டி20 போட்டியில் அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாமிடம் பிடித்தார்.

“ஒரே ஆட்டம்; பல சாதனைகள்” : வெஸ்ட் இண்டீஸை துவம்சம் செய்த இந்திய அணி!

நேற்றைய போட்டியில் இந்திய அணி 240 ரன்களை குவித்தது. இது இந்திய அணியின் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முன்னதாக இலங்கை அணிக்கு எதிராக, கடந்த 2017ம் ஆண்டு இந்திய அணி 260 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக உள்ளது.

banner

Related Stories

Related Stories