விளையாட்டு

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : புதிதாக இணைந்த இளம்வீரர்!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : புதிதாக இணைந்த இளம்வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று T20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் வருகிற 15ம் தேதியும், 2-வது 20 ஓவர் போட்டி மொகாலியில் 18ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் 22ம் தேதியும் நடக்கிறது.

இரு அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2ம் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் அக்டோபர் 10ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 19ம் தேதியும் தொடங்குகிறது.

20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குழுவினர் தற்போது அறிவித்து உள்ளனர்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி :

விராட் கோலி(கேப்டன்), மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, விகாரி, ரிஷப் பண்ட், சாஹா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது சமி, பும்ரா, இஷாந்த் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்த கே.எல்.ராகுலிற்கு பதிலாக உள்ளூர் போட்டிகளில் கலக்கி வந்த சுப்மன் கில் அணியில் இடம்பெற்றுள்ளார். இதன்மூலம் இந்த தொடரில் ரோஹித் சர்மாதான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories