விளையாட்டு

வித்தியாசமான முறையில் தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடிய சச்சின்! (வீடியோ)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் புது விதமாக தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடி அதற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

வித்தியாசமான முறையில் தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடிய சச்சின்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் ஹாக்கி வீரரும், இந்திய அணியின் கேப்டனுமாக இருந்த மேஜர் தயான்சந்தின் பிறந்தநாளான நேற்று (ஆக.,29) தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டது.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, நாட்டில் உள்ள அனைவரும் அன்றாட வாழ்க்கையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ‘ஃபிட் இந்தியா’ என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

வித்தியாசமான முறையில் தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடிய சச்சின்! (வீடியோ)

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் வித்தியாசமாக விளையாட்டு தினத்தை கொண்டாடியுள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

அதன்படி, மும்பையில் உள்ள முதியோர் காப்பகத்தில் உள்ள முதியவர்களுடன் தேசிய விளையாட்டு தினத்தை சிரித்து மகிழ்ந்து, கேரம் போர்டு விளையாடி, கதைகள் பேசி சச்சின் கொண்டாடியுள்ளார்.

அதற்கான வீடியோவையும் இணைத்து, “இதுபோன்ற அபூர்வமான, அதிசயமான பெண்களுடன் விளையாட்டு தினத்தை கொண்டாடியதன் மூலம் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். கேரம் விளையாட்டை ஆடும் அவர்களின் உற்சாகத்திற்கு எல்லையே இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories