விளையாட்டு

உலகக்கோப்பையில் இடம் இல்லை என்கிற ஏமாற்றத்தால் ஓய்வு அறிவித்தேன்.. ஆனால், : மனம் மாறிய அம்பதி ராயுடு !

மீண்டும் சில வருடங்கள் கிரிக்கெட் விளையாட முடிவு செய்திருந்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பையில் இடம் இல்லை என்கிற ஏமாற்றத்தால் ஓய்வு அறிவித்தேன்.. ஆனால், : மனம் மாறிய அம்பதி ராயுடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலககோப்பைக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியில் 4ம் இடத்தில் களமிறங்கி விளையாடி வந்தவர் அம்பதி ராயுடு. ஆனால் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் அம்பத்தி ராயுடு இடம்பெறவில்லை. இருப்பினும் அணியில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் மாற்று வீரராகத் தேர்ந்து எடுக்கப்படுவார் என்று கூறப்பட்டது.

காயம் காரணமாக ஷிகர் தவான் அணியில் இருந்து விலகியதால் ராயுடு சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதில் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். அதே போல் விஜய் சங்கர் காயத்தால் வெளியேறிய போது, ரிசர்வில் மிச்சமிருக்கும் அம்பத்தி ராயுடு சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக மயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணியில் இடம் கிடைக்காத அதிருப்தியில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ராயுடுவின் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உலகக்கோப்பையில் இடம் இல்லை என்கிற ஏமாற்றத்தால் ஓய்வு அறிவித்தேன்.. ஆனால், : மனம் மாறிய அம்பதி ராயுடு !

இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி.வி.பார்த்தசாரதி கோப்பையில் அம்பதி ராயுடு விளையாட உள்ளார். இதற்காக சென்னை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''உலகக்கோப்பை தொடருக்காக 4 வருடங்களுக்கு மேலாக கடுமையாக உழைத்து வந்தேன். உலகக்கோப்பை அணியில் தேர்வாகவில்லை என்பதால் கடும் ஏமாற்றமடைந்தேன்.உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை அறிவிக்கவில்லை. இதுதான் சரியான தருணம் எனத் தோன்றியதால் ஓய்வை அறிவித்தேன்.

எதிர்பார்த்த ஒன்று கிடைக்கவில்லை என்றால் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வது தான் சரியென நினைத்து அவ்வாறு முடிவெடுத்தேன். தற்போது மீண்டும் சில வருடங்கள் கிரிக்கெட் விளையாடலாம் என முடிவு செய்திருக்கிறேன். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுத உள்ளேன். ஐ.பி.எல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். சென்னை அணி எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. கிரிக்கெட்டை முழுமையாக நேசிக்கிறேன்'' என தெரிவித்து உள்ளார்.

banner

Related Stories

Related Stories