விளையாட்டு

ரோஹித், கெயில் இருவருக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா ? : ரோஹித் வெளியிட்ட புகைப்படத்தால் ஆச்சர்யமான ரசிகர்கள்

இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா கிறிஸ் கெயிலுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ரோஹித், கெயில் இருவருக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா ? : ரோஹித் வெளியிட்ட புகைப்படத்தால் ஆச்சர்யமான ரசிகர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.இந்நிலையில், இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.

T20 தொடரை இழந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக மூத்த வீரர் கிறிஸ் கெயில் ஒருநாள் தொடரில் விளையாட அழைக்கப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பை தொடருடன் கெயில் ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்கு இதுவே கடைசி ஒருநாள் தொடராக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா கிறிஸ் கெயிலுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், இருவருடைய ஜெர்சி எண்ணும் 45 என்பதை சுட்டிக்காட்டி உள்ளார் ரோஹித் சர்மா. ரோஹித், கெயில் இருவருமே சிக்ஸர் அடிப்பதில் கில்லாடிகள். கிறிஸ் கெயில் இதுவரை 529 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

கெயிலின் சாதனையை ஹிட்மேன் ரோஹித் சர்மா விரைவில் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது. ரோஹித் சர்மா தற்போது 373 சிக்ஸர்கள் விளாசி நான்காம் இடத்தில் உள்ளனர். சமீபத்தில் சர்வதேச T20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்து இருந்த கிறிஸ் கெயிலின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இருவரின் ஜெர்சி எண்ணும் 45 என்பது பலருக்கும் வியப்பாக உள்ளது. தற்போது நடக்க உள்ள ஒருநாள் தொடரில் கிறிஸ் கெயில் - ரோஹித் சர்மா இவர்கள் இருவரில் யார் அதிக சிக்ஸர்கள் அடிப்பார்கள் என்று ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories