விளையாட்டு

மீண்டும் அணியில் விளையாட நான் விருப்பம் தெரிவிக்கவில்லை! - மனம் நொந்த டிவில்லியர்ஸின் உருக்கமான கடிதம்

தன்னை தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்க வேண்டும் என்று தான் வலியுறுத்தவில்லை என ஏ.பி.டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

தென் ஆப்பிரிக்க அணிக்காக நடப்பு உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க ஓய்வு பெற்ற டிவில்லியர்ஸ் முன் வந்ததாகவும், ஆனால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அதை ஏற்க மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தான் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என ஏ.பி.டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், '' நான் ஓய்வு அறிவித்த தினத்தன்று என்னிடம் தனிப்பட்ட முறையில் உலகக்கோப்பைக்கு வரும் எண்ணமுள்ளதா என்று கேட்கப்பட்டது. நான் ஆமாம் என்றேன். அப்போதே நான் வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய இயல்பான மனநிலை எதையும் யார் கேட்டாலும் மறுக்காது. உடனடியாக பதில் தர வேண்டும் என்பதால் ஆம் என கூறிவிட்டேன்.

ஆனால், அதன் பிறகு எனக்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்களும் என்னை அழைக்கவில்லை, நானும் அவர்களை அழைக்கவில்லை.

மீண்டும் அணியில் விளையாட நான் விருப்பம் தெரிவிக்கவில்லை! - மனம் நொந்த டிவில்லியர்ஸின் உருக்கமான கடிதம்

நானும் டுபிளெசிஸும் பள்ளி காலத்திலிருந்தே நண்பர்கள். உலகக்கோப்பை அணி அறிவிப்பதற்கு 2 நாட்கள் முன்னதாக நான் அவரைத் தொடர்பு கொண்டேன். அப்போது தேவைப்பட்டால் நான் உலகக்கோப்பையில் ஆடுகிறேன், அதாவது ’தேவைப்பட்டால்’ என்றே கூறினேன். நான் வற்புறுத்தவும் இல்லை அணிக்குள் பலவந்தமாக நுழையவும் முயற்சிக்கவில்லை.

மீண்டும் அணியில் விளையாட நான் விருப்பம் தெரிவிக்கவில்லை! - மனம் நொந்த டிவில்லியர்ஸின் உருக்கமான கடிதம்

என் மனைவி, குழந்தைகளுடன் நேரம் செலவிட நினைத்தே ஓய்வு அறிவித்தேன். பணிச்சுமை காரணமாக களைப்பு ஏற்பட்டு ஓய்வு அறிவித்தேன். ஆனால் மக்கள் நான் பணத்தாசை பிடித்தவன் அதனால்தான் தேசத்துக்கு ஆடாமல் தனியார் கிரிக்கெட்டுக்குச் சென்று விட்டேன் என்று சாடினர். ஆனால் அதில் உண்மையில்லை. எனக்கு பல லீக்-களிலிருந்தும் பெரிய தொகை கொடுத்து ஆட அழைப்பு விடுக்கப் பட்டது. ஆனால் நான் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆண்டுக்கு 8 மாதங்கள் குடும்பத்தை விட்டு பிரிய நேர்ந்தது, ஓய்வுக்குப் பிறகு இது 3 மாதங்களாகக் குறைந்தது.என்னுடைய மனசாட்சி தெளிவாகவே உள்ளது. நேர்மையான காரணங்களுக்காகவே ஓய்வு பெற்றேன். ஆனால் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்ற போது எங்களுடைய சொந்த உரையாடல்கள் ஊடகங்களுக்குக் கசிந்து என்னை மோசமானவனாகச் சித்தரித்தது.

அந்தக் கதை என்னாலோ, டுபிளெசிஸாலோ கசியவில்லை, யாரோ அணியின் தோல்வி மீதான விமர்சனத்தை திருப்பி விட விரும்பி இப்படிச் செய்திருக்கலாம். இதுவும் எனக்குத் தெரியவில்லை.இதனையடுத்தே என்னை செருக்குப் பிடித்தவன், சுயநலம் பிடித்தவன், தீர்மானமற்றவன் என்றெல்லாம் விமர்சித்தனர்.

என்னுடைய மனசாட்சி தெளிவாகவே உள்ளது, நேர்மையான காரணங்களுக்காகத்தான் நான் ஓய்வு பெற்றேன். என்னை வளர்த்த கிரிக்கெட்டையும் அது எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அபாரமான நட்புகளையும், வாய்ப்புகளையும் நான் என்றென்றும் மறவேன் '' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories