விளையாட்டு

தோனி மீது கோபமா ? குழப்பத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் : சர்ச்சையில் யுவராஜ் சிங்

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

தோனி மீது கோபமா ? குழப்பத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் : சர்ச்சையில் யுவராஜ் சிங்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு இவர் முக்கிய காரணமாக இருந்தார்.

கடந்த உலக்கோப்பைக்கு பிறகு கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். சிகிச்சைக்கு பிறகு பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இந்நிலையில் சென்ற மாதம் இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

யுவராஜின் வாய்ப்பு பறி போனதற்கு தோனியும் முக்கியமான ஒரு காரணம் என்று சில கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருவது வழக்கமாக உள்ளது. யுவராஜ் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு தோணி தான் காரணம் என யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தோனி தன்னுடைய 38வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். தோனிக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் யுவராஜ் சிங் மட்டும் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. மாறாக, இன்று பிறந்த நாள் கொண்டாடும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு யுவராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதான் தோனிக்கு வாழ்த்து தெரிவிக்காமல் கங்குலிக்கு யுவராஜ் வாழ்த்து தெரிவித்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தோனி மீது யுவராஜுக்கு கோபம் இருக்கிறதா, இருவருக்கும் இடையில் என்ன பிரச்சனை நிலவி வருகிறது, ஏன் அவர் இப்படி கோபத்துடன் நடந்து கொள்கிறார் என்று பலர் யுவராஜின் ட்வீட்டில் கமெண்ட் செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories