விளையாட்டு

இந்தியா - இலங்கை போட்டி : முன்னாள் வீரர் ஜெயசூரியாவுக்கு மைதானத்தில் நேர்ந்த அவமானம் 

நேற்றைய இந்தியா - இலங்கை போட்டியைக் காண வந்த, ஜெயசூர்யாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

உலகக்கோப்பை தொடரின் லீட்ஸில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது. இந்தியா வெறும் 3 விக்கெட் இழப்பில் 43.3 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இந்தியா - இலங்கை போட்டி : முன்னாள் வீரர் ஜெயசூரியாவுக்கு மைதானத்தில் நேர்ந்த அவமானம் 

நேற்று நடந்த இந்த போட்டியை காண இலங்கை அணியின் ஓய்வுபெற்ற நட்சத்திர வீரர் சனத் ஜெயசூரியா வந்து இருந்தார். அவர் ரசிகர்களுடன் ரசிகராக அமர்ந்து அவர் போட்டியை கண்டுகளித்தார். ஜெயசூரியா ரசிகர்களுடன் ரசிகராக ஆட்டத்தை கண்டுகளித்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்குக் காரணம், அவருக்கு ஐ.சி.சி இரண்டு வருடங்கள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. அவரிடம் முறைகேடாக சொத்துக்கள் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து ஐ.சி.சி அமைப்பின் ஊழல் தடுப்பு பிரிவு அவரை விசாரிக்க முடிவு செய்தது. ஆனால் விசாரணைக்கு ஜெயசூரியா ஒத்துழைக்கவில்லை. இதனால் ஐ.சி.சி அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது.

இதனால் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் வீரர்களை சந்திக்க கூடாது, அவர்களிடம் பேச கூடாது, ஐ.சி.சி நிகழ்வுகளில் கலந்து கொள்ள கூடாது, அணி நிர்வாகிகள் இருக்கும் அறைக்கு செல்ல கூடாது, என ஐசிசி நிறைய கட்டுப்பாடுகள் விதித்தது.

இதனால்தான் நேற்று ஜெயசூரியா ரசிகர்களுடன் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்தார். ஜெயசூரியாவுடன் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அரவிந்த டிசில்வாவும் ஆட்டத்தை கண்டுகளித்தார்.

இலங்கை அணியின் தலைசிறந்த வீரர்கள் ரசிகர்களுடன் ரசிகராக ஆட்டத்தை கண்டுகளித்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

banner

Related Stories

Related Stories