விளையாட்டு

இளைஞர்களின் ரோல் மாடல்.. ‘தோனி’ என்னும் மேஜிக் மேன் - பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு !

இளைஞர்களின் ரோல் மாடல்.. ‘தோனி’ என்னும் மேஜிக் மேன் - பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

2004ம் ஆண்டின் ஒரு நாள்...

சச்சின், கங்குலி, ட்ராவிட், லட்சுமணன்னு பேட்டிங்லாம் நல்லா தான் இருக்கு ஆனா ஒரு விக்கெட் கீப்பர் கிடைக்கலனு இந்திய அணி நிர்வாகிகளும், கில்கிறிஸ்ட், பவுச்சர், சங்ககாரா இவர்களை மாதிரியெல்லாம் இந்தியா டீம்ல ஆள் இல்லையேனு இந்திய ரசிகர்களும் ஏங்கி போயிருந்த காலம் அது.

அதுக்கு முன்னாடி தான் தீப்தாஸ் குப்தா, அஜய் ராத்ரா, சபா கரீம், பார்த்திவ் பட்டேல், தினேஷ் கார்த்திக்னு வீக்கெட் கீப்பருக்கு ஆடிஷன் நடத்தியிருந்தது பி.சி.சி.ஐ.

புதிதாக யாரையாவது இறக்கி பார்க்கலாம்னு முடிவு பண்ணி 23 டிசம்பர் 2004 பங்களாதேஷ் கூட நடந்த ஒருநாள் தொடர்ல ஒரு புதுமுகமாக ஒரு பையனை களமிறக்குது, தலை நிறையா முடி, நல்ல உயரம், நடந்து வரும் போதே கம்பீரமான தோற்றம் இப்படி ஒரு கீப்பர் அணிக்கு அறிமுகம் செஞ்சுச்சு பி.சி.சி.ஐ. அப்போதான் நிறைய பேருக்கு அந்த பையனோட பெயரே தெரியும், அதுதான் நம்ம மஹேந்திர சிங் தோனி. முதல் போட்டியிலேயே ரன் அவுட் அதுவும் டக் அவுட் சொல்லவா வேணும், சரி இன்னோரு கீப்பர பார்க்க வேண்டியதுதான்னு முடிவு பண்ணிட்டாங்க...

அடுத்த தொடர்லயும் தோனிக்கு வாய்ப்பளிக்கப்படுது. ஒருவேளை இந்த தொடர்லயும் சரியா ஆடலனா இந்த பையனுக்கு பதில் வேற ஒரு ப்ளேயர எடுத்து பார்க்கலாம்ங்குற மனநிலைல தான் தோனிய இந்திய அணி தேர்வு பண்ணினாங்க.

முதல் போட்டில ஜெயிச்சிருந்த இந்தியா இரண்டாவது போட்டியில டாஸ் வென்று பண்ணி பேட்டிங் தேர்வு செய்தனர். 4வது ஓவர்லயே சச்சின் அவுட், கேப்டன் கங்குலிதான் அடுத்து வருவாருன்னு மொத்த இந்தியாவும் எதிர்பார்த்த நேரத்தில் தலை நிறையா முடிய சிலிப்பிவுட்டு, தோனி நடந்து வர்றத பார்த்த எல்லாரும் என்னப்பா இந்த பையனா இவன் எப்படினு கேட்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக தோனி தான் சந்திச்ச முதல் பந்துல பவுண்டரியோட ஆரம்பிக்குறாரு. அடுத்து என்ன சரவெடிதான், 15 பவுண்டரி 4 சிக்ஸர்னு பாகிஸ்தான் பெளலிங்கை வெளுத்து வாங்கினார் தோனி.

அந்த மேட்ச் ஜெயிச்சதுக்கு கூட இந்திய ரசிகர்கள் சந்தோஷப்படல... இப்ப வாங்க பார்ப்போம் எங்கள்ட்ட தோனி இருக்காரு, உங்க டீம்ல அப்படி யார் இருக்கானு கேட்க ஆரம்பித்தனர். இந்தியா பாகிஸ்தான் தொடரை வென்ற பிறகு பாகிஸ்தான் அதிபரா இருந்த முஷரஃப் எனக்கு தோனிய ரொம்ப புடிக்கும், அந்த முடிய நல்லா பாத்துக்கங்க வெட்டிடாதீங்கனு சொன்னது இன்றும் எல்லார் மனதிலும் நிற்கும் விஷயம். இப்படித்தான் தோனி என்னும் மேஜிக் மேன் இந்திய அணிக்குள் வந்தார்.

தோனி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர். டிக்கெட் பரிசோதகரா கரக்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல வேலை செய்தார். அதன் நடுவே கிரிக்கெட் ட்ரெயினிங்னு இந்திய அணிக்குள்ள வந்ததெல்லாம் ஒரு பெரிய அன்டோல்டு ஸ்டோரி. இன்னிக்கு நாம கொண்டாடப்போறது தோனிங்ற மேஜிக் மேனப்பத்திதான்....

இளைஞர்களின் ரோல் மாடல்.. ‘தோனி’ என்னும் மேஜிக் மேன் - பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு !

2007 டி20 உலகக்கோப்பை பாகிஸ்தானோட லீக் மேட்ச், எல்லாருமே இளம் வீரர்கள் முதல்ல பேட்டிங் செஞ்ச இந்தியாவ பாகிஸ்தான் 141 ரன்களுக்கு கட்டுப்படுத்திருக்கும்... கடைசி ஓவர்ல 12 ரன் தேவை.. ஶ்ரீஷாந்த் ஓவர் முதல் நாலு பந்துலயே பாகிஸ்தான் 11 ரன்கள எடுத்துருவாங்க... கடைசி 2 பந்துக்கும் ஶ்ரீஷாந்த்கிட்ட வந்து பேசிட்டு போய் கீப்பிங் செய்வாரு. அதன்பிறகு இரண்டு பாலும் டாட் பால். கடைசி பால் ரன் அவுட் செய்து மேட்ச் டை ஆகிவிடும்.

அதுக்கு அப்புறம் கால்பந்தில் உள்ளது போல் டைப்ரேக்கர் கொண்டுவரப்பட்டது.. ரெண்டு டீமும் 5 பந்து வீசணும் வெறும் கீப்பர மட்டும் வைச்சு அதுல யாரு அதிகமா போல்ட் ஆக்குறாங்களோ அவங்க தான் வின்னர்னு சிம்பிள் ரூல்ஸ்... பாகிஸ்தான் தன்னோட முன்னணி 5 பந்துவீச்சாளர்கள கொண்டு வந்தது.

ஆனா தோனி உத்தப்பா, சேவாக், ஹர்பஜன், பதான், ஶ்ரீஷாந்து ஆகியோரை பந்துவீச சொன்னார். இங்க முன்னணி பந்து வீச்சாளரவிட ஸ்டெம்ப வீழ்த்துற பந்துவீச்சாளர் தேவை என்று தோனிக்கு தெரியும். உத்தப்பா, சேவாக், ஹர்பஜன் ஸ்டெம்ப வீழ்த்த 3-0னு பாகிஸ்தான் தோத்து போச்சு...

இளைஞர்களின் ரோல் மாடல்.. ‘தோனி’ என்னும் மேஜிக் மேன் - பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு !

அடுத்து அதே டி20 உலகக் கோப்பை தொடர்ல ஃபைனல் அதே பாகிஸ்தான்... இந்த முறை கடைசி ஓவர்ல 13 ரன் தேவை... ஹர்பஜனிடம் ஒரு ஓவர் மீதி உள்ளது. மிஸ்பா உல் ஹக் நல்ல ஃபார்ம்ல இருக்காரு... ஆனா தோனி எடுத்த முடிவு வித்தியாசமானது.

ஜோஹிந்தர் ஷர்மாவ கடைசி ஓவர் போட வைச்சு முதல் பால் வைடு, இரண்டாவது பால் சிக்ஸர்னு பயமுறுத்த மூன்றாவது பந்தில் மிஸ்பா அவுட் ஆகுவார். முதல் டி20 உலகக் கோப்பைய சச்சின், கங்குலி, ட்ராவிட், லட்சுமணன்னு சீனியர் பிளேயர் இல்லாமல் தோனி டீம் ஜெயிச்சாங்க.

இந்தியாவோட டெஸ்ட் கேப்டன்ஸி கும்ப்ளேவிடமும், ஒருநாள் கேப்டன்ஸி ட்ராவிட்டிடமும், டி20 கேப்டன்ஸி தோனி இடமும் இருந்தது. அதன்பிறகு, கொஞ்சம், கொஞ்சமா மாறி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துவகை போட்டிகளுக்கும் தோனிதான் கேப்டன்.

இளைஞர்களின் ரோல் மாடல்.. ‘தோனி’ என்னும் மேஜிக் மேன் - பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு !

தோனி கேப்டன்ஷிப்ல மூத்த வீரர்களுக்கு அவ்வளவா மரியாதை கொடுக்கவில்லை அன்று சொல்வார்கள். ஆனால், கங்குலியோட கடைசி டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா கூட நடக்கும், 5வது நாள் நடக்குற அந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோக்குற நிலைல கடைசி ஒரு விக்கெட்ட வைத்து விளையாடிக் கொண்டு இருக்கும். அப்ப தோனி கங்குலிய கேப்டன்ஷிப் பண்ண சொல்லிட்டு கீப்பரா மட்டும் இருப்பாரு. மொத்த கிரவுண்டும் தாதா...தாதா என்று மட்டும் கத்தாமல் தோனி..தோனி என்று சேர்த்து அதிர வைக்கும்..

எல்லாருமே சொல்லுவாங்க தோனி ஜெயிக்க அதிர்ஷ்டம் காரணம்னு. ஆமாம் தோனிக்கு அதிர்ஷ்டம்தான்... ஆனா அது வெற்றியில் இல்ல தன்னோட டீம் வீரர்கள ஜெயிக்க வைச்சு, அவங்கு கூடவே நின்னு அழகு பாக்குற அதிர்ஷ்டம் வேற யாருக்கு கிடைக்கும் சொல்லுங்க?

சச்சின் 200 அடிக்கும் போது, யுவராஜ் 6 பந்துல 6 சிக்ஸர் அடிக்கும் போது, ரோஹித் ஷர்மாவோட 209 அடிச்சப்ப எல்லாம் எதிர்முனைல கூலா நின்னு அவங்க சாதனைக்கு உதவிருப்பாரு தோனி.

இளைஞர்களின் ரோல் மாடல்.. ‘தோனி’ என்னும் மேஜிக் மேன் - பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு !

2011 உலகக் கோப்பை போட்டித்தொடரில் கம்பீரோட பங்களிப்ப தோனி சீக்கிரமா களமிரங்கி மறைச்சுட்டாருனு சிலர் சொல்லுவாங்க... ஆனால் அப்படி இல்லை முரளிதரனை சமாளிக்க இந்தியா தடுமாறிட்டு இருந்த சமயம் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனா நெட்ல முரளிதரன அதிகமா ஃபேஸ் பண்ண அனுபவம் அவருக்கு கைகொடுக்கும்னு நம்பி இறங்குனாரு. அப்பறம் நடந்த எல்லாமே வரலாறு.

2011க்கு முன்னாடி 9 உலகக் கோப்பை இறுதிப்போட்டி வெல்லப்பட்டிருக்கு ஆனா தோனியோட அந்த கடைசி சிக்ஸர் மாதிரி எந்த ஆட்டமும் முடியல. இனியும் அப்படி ஒரு விஷயம் நடக்குமானு தெரியல...

2013 சாம்பியன்ஸ் கோப்பை போட்டி ஃபைனல்ல இஷாந்த் ஷர்மாவை ஏன் அணியில் எடுத்தாருனு மேட்ச் ஆரம்பிக்கும் போது ஒரு கேள்வி எழுந்தது. அதற்கு, மேட்ச்ல இஷாந்த்த வைச்சே பதில் சொல்ல வைச்சிருப்பாரு. ரெண்டு விக்கேட் அடுத்தடுத்த பந்துலனு மிரட்டி இருப்பாரு.

ஐ.பி.எல்.லில் யாருமே நிக்க வைக்காதே இடங்களில் ஃபீல்டிங் செட் பண்ணி பேட்ஸ்மேன திணறடிக்கறது தோனியோட ஸ்பெஷாலிட்டி.

அஷ்வினிடம் ஒருமுறை உங்கள்ட்ட தோனி எதாவது சொல்லுவாறா விக்கெட் எடுத்தா, இல்ல மோசமாக பந்துவீசினால் என்று கேட்டதற்கு அவர் முகம் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். ஏன்னா அவர் தோனினு பதில் சொல்லி இருப்பாரு.

இளைஞர்களின் ரோல் மாடல்.. ‘தோனி’ என்னும் மேஜிக் மேன் - பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு !

போட்டிகளில் எதிர்பார்க்காத விஷயத்தை செய்வது மட்டுமின்றி அவரோட கரியர்லயும் எதிர்பார்க்காத விஷயங்களை செய்து ஆச்சர்யம் மட்டுமில்ல கொஞ்சம் அதிர்ச்சியும் அடைய வைப்பார்.

2014 டெஸ்ட் போட்டிகள்ல இருந்து ரிட்டையர் ஆகுறேன்னு மெல்பெர்ன் போட்டிக்கு பிறகு ட்ரெஸ்ஸிங் ரூம்ல சொல்லி இருக்காரு. அவர் சொன்னதுக்கு அப்பறம் ஒருநாள் ட்ரெஸ்ஸிங் ரூம் சோகமாவே இருந்ததாக கோலி ஒரு போட்டியில் சொல்லியிருப்பார். 2016 டி20 வேர்ல்டு கப்ல செமி ஃபைனல்ல இந்தியா தோற்கும். அப்ப ஒரு பத்திரிக்கையாளர் நீங்க ஓய்வு பெற போகுறதா செய்தி வருதேனு சொல்லும்போது அவரை அழைத்து தனதருகில் அமரவைத்தது ஒரு 3 கேள்வி கேப்பாரு அதெல்லாம் வேற லெவல்.

2018 நியூ இயர்ல ஒரு அதிர்ச்சிய தந்திருப்பாரு, ஒருநாள் , டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இனிமேல், மூன்று விதமான ஆட்டங்களுக்கும் கோலியே கேப்டனா இருப்பார் என கூறினார். அப்ப தோனி சொன்னது சிலருக்கு புரியலனாலும், இன்று உலகக் கோப்பைல இந்தியா கோலி தலைமையில் சிறப்பா செயல்படுகிறது. 20 மாசத்துக்கு முன்னாடி கோலிக்கு கேப்டன்ஸிய கொடுத்ததுதான் அதற்கு காரணம்.

இளைஞர்களின் ரோல் மாடல்.. ‘தோனி’ என்னும் மேஜிக் மேன் - பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு !

கோலி கேப்டனா இருந்தப்பதான் தோனி தன்னோட 300வது மேட்ச்ல ஆடினாரு. போட்டிக்கு முன்னாடி நடைப்பெற்ற டீம் மீட்ல கோலி பரிச கொடுத்துட்டு இங்க இருக்குற வீரர்கள்ல 90 சதவிகிதம் பேர் நீங்க கேப்டனா இருக்குற அணியில தான் எங்க கிரிக்கெட் வாழ்க்கைய துவங்கினோம், நீங்க தான் என்னிக்கும் எங்களோட கேப்டன்னு சொல்லிருப்பாரு.

ஆமாங்க களத்துக்கு வெளியில இந்தியாவுக்கு பேட்டிங், பீல்டிங், பெளலிங்குனு நிறைய பயிற்சியாளர்கள் இருக்காங்க களத்துக்குள்ள ஒரு பந்துக்கும், இன்னொரு பந்துக்கும் நடுவுல ஒரு பயிற்சியாளர் இருந்தா எப்படி இருக்கும் அப்படி ஒரு ஆள் தான் தோனி...

இளைஞர்களின் ரோல் மாடல்.. ‘தோனி’ என்னும் மேஜிக் மேன் - பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு !

தோனி பயோபிக்கிற்கு முன்னாடி சுஷாந்த் சிங் ராஜ்புத் நாலு படம் நடிச்சிருந்தாரு. அதன்பிறகும் நாலு படம் நடித்துவிட்டார். ஆனாலும் தன்னை தோனியாதான் மக்கள் பாக்குறாங்க, தோனிகிட்ட என்ன பேசினீங்க, ஹெலிகாப்டர் ஷாட் ஆடத்தெரியுமானுதான் மக்கள் கேக்குறாங்கனு சுஷாந்த் சொல்லியருக்கிறார். ஒரு தலைவனை உருவாக்க முடியாது தானா உருவாகணும்ங்கிறதுக்கு தோனி சரியான உதாரணம்.....

தோனி ரிட்டயர் ஆனா அவருக்கு பதிலா ஒரு நல்ல கீப்பர் கிடைக்கலாம், ஒரு நல்ல பேட்ஸ்மேன் டீமுக்குள்ள வரலாம். ஆனால், தோனி மாதிரி ஒரு நல்ல லீடர் கிடைப்பாரான்னா தெரியாது. ஏன்னா அவர் தோனி...

தோனி ஒரு மேஜிக் மேன் !

banner

Related Stories

Related Stories