விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் ; வெஸ்ட் இண்டீஸ்க்கு 269 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா !

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 269 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

உலகக்கோப்பை கிரிக்கெட் ; வெஸ்ட் இண்டீஸ்க்கு 269 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் கோலி களமிறங்கினார். விராட் கோஹ்லி இருவரும் சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராகுல் 48 ரன்னுக்கு அவுட்டானார்.அடுத்து வந்த விஜய் சங்கர், கேதர் ஜாதவ் சொற்ப ரங்களுக்கு அவுட்டாகினார். மறுமுனையில் அரைசதம் அடித்த கேப்டன் விராட் கோஹ்லி , 72 ரன்னுக்கு அவுட்டானார்.

கடைசி நேரத்தில் தோனி, பாண்ட்யா இணைந்து ஸ்கோரை உயர்த்த போராடினர். 6வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 70 ரன்கள் எடுத்தனர். பாண்ட்யா (46) ரன்களுக்கு அவுட்டானார். கடைசி ஓவரில் 2 சிக்சர் உட்பட 16 ரன்கள் விளாசிய தோனி, அரைசதம் எட்டினார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்தது. தோனி (56) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

banner

Related Stories

Related Stories