விளையாட்டு

உலகக்கோப்பையில் அதிக கேட்ச்களை கோட்டைவிட்ட அணி எது தெரியுமா? 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சாஹல் ஓவரின்போது ராகுல் தவறவிட்டது தான் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா மிஸ் செய்த ஒரே கேட்ச்.

உலகக்கோப்பையில் அதிக கேட்ச்களை கோட்டைவிட்ட அணி எது தெரியுமா? 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இதற்காக அணிகள் கடுமையாகப் போராடி வருகின்றன. சில ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும் நியூசிலாந்து இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியுடன் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்நிலையில், நடந்து முடிந்த 30 போட்டிகளிலும் மோசமான ஃபீல்டிங் என்ற வகையில் அதிக கேட்ச்களை கோட்டை விட்ட அணிகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. மிகக்குறைவான கேட்களை கோட்டைவிட்டு இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது இந்திய அணி.

பாகிஸ்தான் அணி இதுவரை வாய்ப்பு கிடைத்த கேட்ச்களில் 14 கேட்ச்களை கோட்டை விட்டுள்ளது. அந்த அணி தனக்கு கிடைத்த வாய்ப்பில் 35 சதவிகித கேட்ச்களை கோட்டை விட்டுள்ளது. இங்கிலாந்து அணி 12 கேட்ச்களை கோட்டை விட்டிருக்கிறது.

நியூசிலாந்து அணி 9 கேட்ச்களையும், தென் ஆப்பிரிக்க அணி 8 கேட்ச்களையும், வெஸ்ட் இண்டீஸ் அணி 6 கேட்ச் வாய்ப்புகளையும் பறிகொடுத்துள்ளன. ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்திய அணி 15 கேட்ச்களில் ஒன்றை மட்டுமே கோட்டை விட்டுள்ளது. அதனால், தவறவிட்ட கேட்ச் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது இந்தியா. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சாஹல் ஓவரின்போது ராகுல் தவறவிட்டது தான் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா மிஸ் செய்த ஒரே கேட்ச். சிறந்த ஃபீல்டிங் கொண்ட அணி எனும் சிறப்பைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது இந்தியா.

அடிக்கப்படும் பந்துகளைத் தடுத்து ரன்களைக் கட்டுப்படுத்துதல், விரைந்து த்ரோ செய்தல், கேட்ச் பிடித்தல், ரன் அவுட் செய்தல், ரன்களை தடுப்பதும் - கொடுப்பதும் ஆகியவற்றின் அடிப்படையில் வீரர்களின் தரம் நிர்ணயிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories