விளையாட்டு

உலகக்கோப்பை 2019 : ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா ஆப்கானிஸ்தான் !

இங்கிலாந்தில் பிரிஸ்டலில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

உலகக்கோப்பை 2019 : ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா ஆப்கானிஸ்தான் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (சனிக்கிழமை) பிரிஸ்டலில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

கடந்த ஒரு வருடமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஆஸ்திரேலியா அணி ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் வருகைக்கு பிறகு வலுவாக காணப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து, இலங்கையை தோற்கடித்தது. தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வரும் டேவிட் வார்னர் உடல் தகுதியை எட்டினால் தான் இன்றைய ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது.

ஆப்கானிஸ்தான் அணி பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது.ஆப்கானிஸ்தான் அணியின் பலமே சுழற்பந்து வீச்சுதான். ஆல் ரவுண்டர் ரஷித் கான் ஆட்டத்தின் போக்கை அடியோடு மாற்றக் கூடியவர். பேட்டிங்கை பொறுத்தவரை முகமது நபி, அஸ்கர் ஆப்கன், கேப்டன் குல்பாதின் முகமது ஷாஷத் ஆகியோரை ஆப்கானிஸ்தான் நம்பியுள்ளது. இரண்டு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளதால், ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு குறைவிருக்காது.

இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரலையாக ஒளிபரப்புகிறது.

இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா அல்லது ஷான் மார்ஷ், ஸ்டீவன் சுமித், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் கவுல்டர் நிலே, நாதன் லயன் அல்லது ஆடம் ஜம்பா.

ஆப்கானிஸ்தான்: குல்படின் நைப் (கேப்டன்), ஹஸ்ரத்துல்லா சஜாய், முகமது ஷாசத், நூர் அலி ஜட்ரன், ஹஸ்மத்துல்லா ஷகிடி, அஸ்கர் ஆப்கன், நஜிபுல்லா ஜட்ரன், தவ்லத் ஜட்ரன், முகமது நபி, ரஷித் கான், அப்தாப் ஆலம்.

banner

Related Stories

Related Stories