விளையாட்டு

கவுதம் கம்பீர் பேசுவது  முட்டாள்தனமாக உள்ளது: பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி சாடல்!

இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் விளையாடக் கூடாது என்ற கவுதம் கம்பீர் கருத்துக்கு, நிஜமாகவே முளையை பயன்படுத்தி தான் கம்பீர் அவ்வாறு பேசினாரா என சாகித் அஃபிரிடி கேள்வி எழுப்பியுள்ளார்.

கவுதம் கம்பீர் பேசுவது  முட்டாள்தனமாக உள்ளது:  பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களவைத் தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் கவுதம் கம்பீர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடையே பேட்டியளித்த கவுதம் கம்பீர், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்து பிசிசிஐ சில முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டும் என கூறினார்.

மேலும் பேசிய அவர், ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியுடன் விளையாட கூடாது, ஏன் இறுதிப் போட்டியில் விளையாடும் நிலைமை ஏற்பட்டால் கூட விளையாடக்கூடாது. இதனால் இந்தியாவிற்கு சில புள்ளிகள் இழப்பு ஏற்பட்டால் கூட விளையாடக்கூடாது. நம் வீரர்கள் உயிர் தியாகம் செய்ததை நினைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கவுதம் கம்பீர் பேசுவது  முட்டாள்தனமாக உள்ளது:  பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி சாடல்!

இதனைத் தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் சாகித் அஃபிரிடி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கம்பீர் குறித்த கேள்விக்கு, அவர் கூறியதாவது, “ கவுதம் கம்பீர் நிஜமாகவே மூளையை பயன்படுத்தி யோசித்து தான் அவ்வாறு பேசினாரா” என கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர் கம்பீர் பேசுவதை பார்க்கும் போது முட்டாள்தனமாக உள்ளது. புத்தியுள்ளவர்கள் யாரவது இதுபோன்று பேசுவார்களா? அதிலும் படித்தவர்கள், அறிவு உள்ளவர் இப்படித் தான் பேசுவார்களா? என கடுமையாக சாடியுள்ளார்.

கவுதம் கம்பீர் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் அஃபிரிடி இவ்வாறு கருத்து தெரிவித்துருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories