அரசியல்

“SIR-க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக விடுதலை செய்க!” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

“டெல்லியில் தடுப்புகளை அமைப்பது, இணையத்தை முடக்குவது, அரசியல் தலைவர்களை கைது செய்வது போன்றவற்றின் மூலம் இளம் தலைமுறையின் கிளர்ச்சியைத் தடுக்க முடியாது.”

“SIR-க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக விடுதலை செய்க!” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றழைக்கப்படும் ‘இந்தியா’வின் ஜனநாயக மாண்பையே சிதைக்கும் வகையில், SIR முறைகேட்டில் ஈடுபட்ட இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் இளைஞர்களும், இயக்கங்களும், எதிர்க்கட்சிகளும், கட்சிகளின் தலைவர்களும் போராடி வருகின்றனர்.

அவர்களது போராட்டம், இந்திய அரசியலைமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்கும் வகையில் அமைந்திருப்பதால், அவர்களை தடுத்து சிறைபிடித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

பா.ஜ.க என்னும் டெல்லி எஜமானர்களின் மனத்தை குளிர்விக்க, தமிழ்நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை சிறைபிடித்து உண்மையான அடிமை என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறது விஜய் தலைமையிலான த.வெ.க அரசு.

இதனைக் கண்டித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,

“இந்தியாவில் அறிவிக்கப்படாத அவரசகால நிலை நிலவுகிறது. ஜனநாயகத்தை காப்பதற்காக போராடுபவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். துரோகம் இழைத்தவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்.

“SIR-க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக விடுதலை செய்க!” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க போராடிய முன்னாள் முதலமைச்சர்கள் பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, மாணிக் சர்க்கார் மற்றும் சி.பி.ஐ.(எம்) பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்களும், மாணவர் அமைப்புகளைச் சார்ந்தவர்களும் ஒன்றிய பா.ஜ.க அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், SIR முறைகேட்டை கண்டித்தும் தமிழ்நாட்டில் போராடிய சமூக ஆர்வலர்கள், இளைஞர்களை கைது செய்து தங்களது டெல்லி எஜமானர்களை குளிர்வித்துள்ளது திறமையற்ற, தகுதியற்ற த.வெ.க அரசு.

ஆனால், முறைகேட்டில் ஈடுபட்ட இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் Z+ பாதுகாப்புடன் சுதந்திரமாக சுற்றி வருகிறார். என்ன ஒரு அவமானம்!

டெல்லியில் தடுப்புகளை அமைப்பது, இணையத்தை முடக்குவது, அரசியல் தலைவர்களை கைது செய்வது போன்றவற்றின் மூலம் இளம் தலைமுறையின் கிளர்ச்சியைத் தடுக்க முடியாது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தில் (SIR) அரங்கேறிய முறைகேடுகள் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இனி அதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். SIR உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்.”

banner

Related Stories

Related Stories