அரசியல்

உதயநிதி ஸ்டாலினை சந்தித்த தங்க மங்கை வித்யா ராம்ராஜ்.. கழக அரசின் உதவிகளை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சி!

2026-ஆம் ஆண்டு ஆசிய போட்டிகள் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சாதனை படைத்து தங்கம் வென்ற வித்யா ராம்ராஜ் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

உதயநிதி ஸ்டாலினை சந்தித்த தங்க மங்கை வித்யா ராம்ராஜ்.. கழக அரசின் உதவிகளை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

2026-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சாதனை படைத்து தங்கம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ்.

போட்டிகள் முடிந்து தமிழ்நாடு திரும்பிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ஜப்பானில் நடைபெற்ற 20th Asian Games-ல் 42 ஆண்டுகளுக்குப் பிறகு 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து புதிய சாதனை படைத்த தடகள வீராங்கனை தங்கை வித்யா ராம்ராஜை நேரில் வாழ்த்தினோம்.

உதயநிதி ஸ்டாலினை சந்தித்த தங்க மங்கை வித்யா ராம்ராஜ்.. கழக அரசின் உதவிகளை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சி!

கழக ஆட்சிக்காலத்தில் அவரது திறமைக்கு துணை நிற்கும் வகையில் அரசு சார்பில் வழங்கப்பட்ட உதவிகள் - ஊக்கத்தொகை உள்ளிட்டவைக் குறித்து எடுத்துரைத்து அன்பை வெளிப்படுத்தினார்.

அடுத்தடுத்து பல்வேறு சர்வதேச போட்டிகளில் களம் காணவுள்ள தங்கை வித்யா ராம்ராஜின் பதக்கப்பயணம் தொடரட்டும். அன்பும் - வாழ்த்தும்! என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories