அரசியல்

“நெஞ்சத்தை நிறைய வைத்த திராவிட மாடல் அரசின் சாதனைகள்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு!

திராவிட மாடல் அரசின் ‘தோழி விடுதிகள்’ திட்டம் மற்றும் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் அதிகரித்துள்ள பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை ஆகியவை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

“நெஞ்சத்தை நிறைய வைத்த திராவிட மாடல் அரசின் சாதனைகள்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

திராவிட மாடல் அரசில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு என சிறப்பு திட்டமாக ‘தோழி விடுதிகள்’ எனும் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கரங்களால் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தொடங்கிவைக்கப்பட்டது.

இதன் நோக்கமே கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்கள் வேலைக்குச் செல்லும் போது தங்கும் இடங்களுக்கென தனிச் செலவு ஏற்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கோடு செயல்படுத்தப்பட்ட திட்டம்தான்.

இத்திட்டத்திற்கான பலனைக் கண்டு ’உலக வங்கிக் குழுமம்’ ஒரு கட்டுரை தீட்டி இதனை உலக நாடுகள் மற்றும் பிற இந்திய மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என வெகுவாக பாராட்டியுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் ஐந்தில் ஒருவர், அதாவது 20% பேர் 2026-ஆம் கல்வியாண்டில் நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்’ கட்டுரை வெளியிட்டுள்ளது.

திராவிட மாடல் அரசின் இந்த இரண்டு சாதனைகள் குறித்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், நமது திராவிட மாடல் அரசின் சாதனைகள் பற்றி, நேற்று என் நெஞ்சை நெகிழ வைத்த இரு செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலாவதாக, தமிழ்நாடு முழுவதும் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட தோழி விடுதிகள் பற்றி, More Than a Roof: How Safe Housing is Unlocking Women's Path to Education and Jobs in Tamil Nadu என்ற தலைப்பில் WORLD BANK GROUP பாராட்டுக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், அதில், 'பெண்கள் அதிகம் பணிக்குச் செல்வதை ஊக்குவிப்பதுதான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்கும் ஆற்றல்மிக்க வழி. அதற்கு முக்கியத் தடையாக இருப்பது, வாய்ப்புகளைத் தேடி மாநகரங்களுக்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடங்கள் இல்லாததே. அது தீர்க்க கூடிய பிரச்சினைதான் என திராவிட மாடல் அரசின் தோழி விடுதிகள் சாதித்துக் காட்டியுள்ளன. இதனை எல்லா மாநிலங்களும் உலக நாடுகளும் விரைவாகப் பின்பற்ற வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

“நெஞ்சத்தை நிறைய வைத்த திராவிட மாடல் அரசின் சாதனைகள்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு!

இரண்டாவதாக, தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் ஐந்தில் ஒருவர், அதாவது 20% பேர் 2026-ஆம் கல்வியாண்டில் நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்’ கட்டுரை வெளியிட்டுள்ளது.

இது சாதாரணச் சாதனை அல்ல. 2024-25 கல்வியாண்டைவிட, 2025-26 கல்வியாண்டில்70% பழங்குடியின மாணவர்கள் அதிகமாக NIFT, NIT, National Law University, CIPET உள்ளிட்ட முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தேர்வாகியுள்ளனர்.

மேலும், இப்பள்ளிகளில் 2022-இல் 86% இருந்த தேர்ச்சி விழுக்காடு தற்போது 97.33 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, தேர்ச்சி பெற்றவர்களில் 95% மாணவர்கள் உயர்கல்விப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

அரசியல் வேறுபாடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வியில்

திராவிட மாடல் அரசு செய்துள்ள இந்த மகத்தான புரட்சியைச் சிறிதளவும் சிதைக்காமல் தற்போதைய அரசும் வளர்த்தெடுக்க வேண்டும்! என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories