தமிழ்நாடு

“ஜனநாயகன் படத்திற்கு நிதி பெற்றதால்தான் மௌனமாக இருக்கிறீர்களா?” - விஜய்க்கு அப்பாவு கேள்வி!

"துணிவில்லாமல் தடுமாற்றத்துடன் மௌனம் சாதிப்பது ஏன் CM Sir?" என அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஜனநாயகன் படத்திற்கு நிதி பெற்றதால்தான் மௌனமாக இருக்கிறீர்களா?” - விஜய்க்கு அப்பாவு கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

த.வெ.க அரசை ஆந்திரா ரெட்டி கேங் தான் இயக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்குக் காரணமாக, ஆந்திர நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வது, கனிமவளம், விமான நிலையம் போன்ற விவகாரங்களில் அவர்களின் தலையீடுகள் இருப்பதை எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், ஜான் ஆரோக்கியசாமியின் தலையீடும் த.வெ.க அரசில் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் மூலம் ஜனநாயகன் படம் உட்பட பல சினிமா படங்களுக்கு நிதி பெற்றதால் தான் உங்களை மெளனமாக்கி விட்டார்கள் என்று வரும் தகவல் உண்மையா CM sir ? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அப்பாவு வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "கர்நாடக முதல்வரையும் ஆந்திராமுதல்வரையும்

தனக்கு நெருக்கமானவராக காட்டிக்கொள்ளும் விஜய் அவர்களே! தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 16 தொழில் நிறுவனங்கள் ஆந்திராவிற்கு சென்றதை தடுக்க முடியாமலும்,

கர்நாடக முதல்வர் காவேரி நீர் தர தொடர்ந்து மறுத்து வருவதையும் மேகதாது அணை கட்டியே தீர்வேன் என்று கொக்கரித்துக் கொண்டிருப்பதையும் தட்டிக்கேட்க துணிவில்லாமல் தடுமாட்டத்துடன் மெளனம் சாதிப்பது ஏன் CM sir?

தமிழக முதல்வரைச் சுற்றியிருந்து நிழல் உலக தாதா போல் ஆட்சி நடத்தி வரும் ஜான் ஆரோக்கிய சாமி மற்றும் ஆந்திரா ரெட்டிகேங்கில் உள்ள படத்தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் மூலம் ஜனநாயகன் படம் உட்பட பல சினிமா படங்களுக்கு நிதி பெற்றதால் தான் உங்களை மெளனமாக்கி விட்டார்கள் என்று வரும் தகவல் உண்மையா CM sir ?" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories