அரசியல்

“ஜெம் வீரமணி வழக்கை முடிவுக்கு கொண்டுவர வாதிட்டது த.வெ.க அரசுதான்!” : தி.மு.க எம்.பி பி.வில்சன் தகவல்!

“ஜெம் வீரமணி வழக்கில், விஜய் அரசு எந்தவிதமான உரிய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. எனவே, விஜய்யின் வீர வசனம் தேவையற்றது.”

“ஜெம் வீரமணி வழக்கை முடிவுக்கு கொண்டுவர வாதிட்டது த.வெ.க அரசுதான்!” : தி.மு.க எம்.பி பி.வில்சன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பும் சரி, ஆட்சியில் அமர்ந்த பின்பும் சரி த.வெ.க.வின் பிரச்சாரம் என்றால் அதில் தி.மு.க என்ற சொல் கண்டிப்பாக இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

எப்படி, அ.தி.மு.க கொள்கை பேசாமல், வெறும் தி.மு.க எதிர்ப்பை மட்டுமே வைத்து பொய்யான அவதூறு பிரச்சார அரசியல் மேற்கொண்டதோ, அதே பாணியில்தான் த.வெ.க.வும் செயல்படுகிறது என்பது அம்பலமாகியுள்ளது.

கடந்த 4 மாத த.வெ.க ஆட்சியில் உயர்ந்திருக்கும் குற்றங்களையும், மின்வெட்டு உள்ளிட்ட நிர்வாகத் தோல்விகளையும் மறைக்க, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் முயற்சியால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள ஜெம் வீரமணி வழக்கை, தேர்தல் கருவியாக கையில் எடுத்துள்ளார் விஜய்.

ஜெம் வீரமணி வழக்கு தி.மு.க ஆட்சியில் முடித்துவைக்கப்பட்டது என்ற அப்பட்டமான பொய்யை பிரச்சார மேடையில் பேசி சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளார்.

“ஜெம் வீரமணி வழக்கை முடிவுக்கு கொண்டுவர வாதிட்டது த.வெ.க அரசுதான்!” : தி.மு.க எம்.பி பி.வில்சன் தகவல்!

இதற்கு பதிலடி தரும் வகையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், தனது சமூக வலைதளப் பக்கத்தில்,

“ஜெம் வீரமணி வழக்கில், இதுவரை விஜய் அரசு எந்தவிதமான உரிய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு, எனவே, விஜய்யின் வீர வசனம் தேவையற்றது.

தி.மு.க ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக, இன்றைய பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார். அது முற்றிலும் தவறானது. இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர, கடந்த ஆக்ஸ்ட்19 அன்று வாதாடியது விஜய் தலைமையிலான அரசின் பிரதிநிதிதான்.

ஆனால், அவரது வாதத்தை ஏற்காமல் போக்சோ நீதிமன்றம்தான் அடுத்தக்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது” என்ற செய்தியை ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்.

இதனால், மூக்குடைக்கப்பட்ட விஜய், அடுத்த மேடையில் என்ன அவதூறு பேசுவது என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

banner

Related Stories

Related Stories