அரசியல்

மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமா தவெக? : கனிமொழி கேள்வி!

“மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய அரசு, தற்போது இடைத்தேர்தலில் மும்முரம் காட்டிக் கொண்டிருக்கிறது” என தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!

மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமா தவெக? : கனிமொழி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதுகாப்புகளுக்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளாமல், முழுக்கை சட்டை அணியுங்கள் என்று மேம்போக்காக சுகாதாரத் துறை அமைச்சர் அருண் பேசி வருவது கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில், ஒரு வயது குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு, அக்குழந்தை உயிரிழந்திருப்பது பெரும் அச்சுறுத்தலுக்கு வித்திட்டுள்ளது.

இதனைக் கண்டித்து தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,

மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமா தவெக? : கனிமொழி கேள்வி!

“திருவேற்காட்டில் காய்ச்சலால் அவதிப்பட்ட 1 வயது குழந்தை உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகிவரும் நிலையில், மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய அரசு, தற்போது இடைத்தேர்தலில் மும்முரம் காட்டிக் கொண்டிருக்கிறது.

சுகாதாரத் துறை அமைச்சர் தாராபுரத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோன பின், தவெக அரசு இதற்குப் பொறுப்பேற்று, மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது?”

banner

Related Stories

Related Stories