அரசியல்

ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!

“ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், 48 மணிநேரத்தில் பதவி விலக வேண்டும். இல்லை என்றால், நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.”

ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்திய ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டது, தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் என்பது மூவர் கொண்ட அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் பெரும்பான்மையினர் எடுக்கும் முடிவே இறுதி முடிவாக இருந்திட வேண்டும் என்பதே நடைமுறை.

ஆனால், நடைமுறைக்கு எதிராக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையான முடிவுகள் எடுத்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையை நீக்கியும், இல்லாதவர்களுக்கு வாக்குரிமை வழங்கியும் SIR நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இவற்றை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் ஆதாரத்துடன் வெளிப்படுத்தி, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த ஆதாரங்களை சுட்டிக்காட்டி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!

அதன் தொடர்ச்சியாக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனத் தலைவர் அபிஜித் திப்கே இன்று (செப்.24) செய்தியாளர்களை சந்தித்து, “ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும். இல்லையென்றால், அவர் பதவி விலகும் வரை, தேசிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்போம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“SIR மேற்கொள்ளப்பட்டு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொகுதியில் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, அவர் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது.

இதேபோல், மம்தா பானர்ஜி தொகுதியில் 51 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, அவர் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதியில் 40 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, அவர் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

அப்படியென்றால், SIR நடவடிக்கை மேற்கொண்டதன் உண்மை பின்னணி என்ன?

இந்திய தேர்தல் ஆணையத்தில் தன்னிச்சையாக செயல்பட்டு, ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், 48 மணிநேரத்தில் பதவி விலக வேண்டும். இல்லை என்றால், நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம். ஞானேஷ் குமார் பதவி விலகும்வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம்” என்றும் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தேசிய அளவில், ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. ஆனால், ஞானேஷ் குமாரின் தன்னிச்சை செயல்பாடுகளை பின்னிருந்து இயக்கிய பா.ஜ.க.வும், தன்னிச்சையாக செயல்பட்ட ஞானேஷ் குமாரும் இதுவரை இதுகுறித்து வாய்திறக்கவில்லை.

banner

Related Stories

Related Stories