அரசியல்

“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர், தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று (செப்.15) நடைபெற இருந்த தி.மு.க முப்பெரும் விழா, “நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது” என கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா ஆகியோர் பிறந்தநாளையும்;

தமிழினத்தின் விடிவெள்ளியாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க நாளையும் இணைத்து கழக முப்பெரும் விழாவாக கொண்டாட வேண்டும் என்று 1985-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்.

“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

அன்று முதல் இன்று வரை தொடர்ந்து ஆண்டுதோறும் தி.மு.க சார்பில் முப்பெரும் விழா மிகச்சிறப்புடன் நடந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும், வெவ்வேறு மாவட்டங்களில் நடைபெறும் இந்த முப்பெரும் விழா, நடப்பாண்டில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (செப்.15) நடைபெற இருந்தது.

இந்நிலையில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்.15) காலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கழக முன்னணியினர் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன்,“தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடும் காய்ச்சல் இருப்பதால், இந்நிகழ்வு, நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது” என அறிவித்தார்.

banner

Related Stories

Related Stories