அரசியல்

“எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குப்போய் ட்வீட்டா” : முதல்வர் விஜய்க்கு இ.பரந்தாமன் கடும் கண்டனம்!

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியது குறித்து, நான் யாரையும் குறிப்பிட்டு எதுவும் செய்யவில்லை என பதிவிட்டுள்ளதற்கு, எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குப்போய் ட்வீட்டா என இ.பரந்தாமன் பதிலடி.

“எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குப்போய் ட்வீட்டா” : முதல்வர் விஜய்க்கு இ.பரந்தாமன் கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

சட்டப்பேரவையில் நேற்று (செப்.07) காவல்துறை மானியக் கோரிக்கை மீது பதிலுரையாற்றிய முதல்வர் விஜய், மிசா கொடுமைகள் பற்றி வரலாற்று தகவலகளை மறைத்து அரசியல் காரணங்களுக்காக வரலாற்றை திரித்து உரையாற்றினார். அப்போது, அவர் செய்த செய்கை தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் விஜயின் இந்தப் பேச்சுக்கும், அவர் பேரவையின் மாண்பைக் குறைத்து நடந்துகொண்ட விதத்துக்கும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் உட்பட, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில், கடும் எதிர்ப்புக் கிளம்பவே என்னுடைய பேச்சு உள்நோக்கம் கொண்டதல்ல என மலுப்பல் விளக்கத்தை, முதல்வர் விஜய் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் தெரிவித்திருந்தார். 

இதுபோன்று செய்தவதையெல்லாம் செய்துவிட்டு எதிர்ப்பும், கண்டனங்களும் கிளம்பிய உடன் மன்னிப்பு கேட்பதுபோல் நடிப்பதும், பின்வாங்குவதும் தவெக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கும் புதிதல்ல என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

“எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குப்போய் ட்வீட்டா” : முதல்வர் விஜய்க்கு இ.பரந்தாமன் கடும் கண்டனம்!

இந்நிலையில், முதல்வர் விஜயின் பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ள திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் அவர்கள், சட்டப்பேரவையில் உடல் மொழிக்கு வேலையில்லை! உரையாற்றுவது தான் உங்கள் வேலை மாண்புமிகு விஜய் அவர்களே! எல்லாவற்றையும் செய்துவிட்டு பின்பு வீட்டுக்குப்போய் ட்வீட் போடுவது இன்னும் நீங்கள் மாண்புமிகு ஆகவில்லை என்பதையேக் காட்டுகிறது. 

முதல்முறையாக நீங்கள் செய்திருந்தால் உங்களின் இந்த விளக்கத்தை உண்மையென மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் யாரும் இதுவரை செய்திராத கீழ்த் தரமான செயலை நீங்கள் முதல்வர் பொறுப்பை ஏற்றப்பிறகு இது இரண்டாவது முறையாக செய்திருக்கிறீர்கள். 

எனவே வேண்டும் என்றே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தியாக வரலாற்றுக்கு சொந்தமான தலைவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்திருக்கிறீர்கள். 

உழைப்பைத்தந்து, தியாகத்தை தந்து இந்த முதல்வர் பொறுப்புக்கு பல காலம் மக்கள் பணியாற்றிய பின் வந்திருந்தால் இதன் வலிமையை உணர்ந்திருப்பீர்கள்.

ஊதாரித்தனமான வசனங்கள் பேசி வலைதள பொய் பரப்புரை மூலம் பதவிக்கு வந்ததால் முதல்வர் பொறுப்பின் மாண்பும், சட்டமன்ற மாண்பும் இன்று தங்களால் கூனிக்குறுகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் தலைகுனிந்துள்ளனர்.காவல்துறை மானியத்தின் பதிலுரையில் பதிலே இல்லாத பதிலுரையை அளித்த வரலாற்றைப்படைத்த முதல்வர் தாங்கள்.

எதிர்காலத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை அறிந்துக்கொள்ள குறிப்புகளை படிக்கயிருக்கும் அடுத்த தலைமுறையினருக்கு நீங்கள் பதில் அளிக்கத்தெரியாத பொம்மை முதல்வர் என உங்களை நீங்களே பதிவிட்டுவிட்டீர்கள். 

எனவே பழிப்பதற்கும், திமுகவை குற்றம் சுமத்துவதற்கும் நேரத்தை வீணாக்காமல் மாண்புமிகு முதல்வர் என்னும் உயரிய பொறுப்புணர்ந்து பணியாற்றுங்கள், எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories