தமிழ்நாடு

“முதலமைச்சரின் ‘மிசா’ பேச்சு, உடல்மொழி அநாகரிகமானது” : விஜயிக்கு கே.பாலகிருஷ்ணம் கடும் கண்டனம்!

மிசா தாக்குதலை நியாயப்படுத்துவதும், பாதிக்கப்பட்டவர்களை கொச்சைப்படுத்துவதும் கண்டனத்திற்குரியது என சிபிஐ(எம்) மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

“முதலமைச்சரின் ‘மிசா’ பேச்சு, உடல்மொழி அநாகரிகமானது” : விஜயிக்கு கே.பாலகிருஷ்ணம் கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய முதலமைச்சர் விஜய், காவல்துறையின் செயல்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிப்பதைவிட, திமுகவை குறிவைத்து அரசியல் குற்றச்சாட்டுகளை அடுக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

சட்டப்பேரவை என்பது அரசியல் மேடை அல்ல; மக்களின் பிரச்சினைகள், ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் துறை சார்ந்த கேள்விகளுக்கு அரசு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டிய ஜனநாயகத் தளம். ஆனால், முக்கியமான காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தையே கடந்த கால அரசியலை தோண்டி எடுக்கும் களமாக மாற்றியிருப்பது, நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் முதலமைச்சரின் அரசியல் முதிர்ச்சியையே கேள்விக்குறியாக்குகிறது.

சட்டப்பேரவையின் மாண்பையும், அவை மரபுகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கே அதிகம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் அளிப்பதைத் தவிர்த்து அரசியல் தாக்குதல் நடத்துவது சட்டப்பேரவையின் விவாதத் தரத்தையே தாழ்த்துகிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

“முதலமைச்சரின் ‘மிசா’ பேச்சு, உடல்மொழி அநாகரிகமானது” : விஜயிக்கு கே.பாலகிருஷ்ணம் கடும் கண்டனம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றைய தினம் முதலமைச்சர் விஜய் பேச்சு அவை விதிமுறைகளுக்கும் சட்டமன்ற மரபையும் மீறும் வகையில் இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் மிசா தாக்குதலை நியாயப்படுத்துவதும், அந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர்களை கொச்சைப்படுத்துவது போல் முதலமைச்சர் பேசுவதும் வன்மையான கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “சட்டமன்றத்தில் தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக்கொள்வது போல் பேசுகிறார்கள். காவல்துறை மானியக் கோரிக்கையின்போது பேசிய முதலமைச்சர் நிதானமாகப் பதில் கூறலாம். எதிர்க்கட்சிகள் மீது பழியையும், குற்றச்சாட்டுகளையும் சுமத்த சட்டமன்றம் என்ன பட்டிமன்றமா? முதலமைச்சரின் உடல்மொழி நியாயமாக இல்லை. முதலமைச்சரே இப்படி பேசும்போது, நாளை அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி பேசுவார்கள்?

“முதலமைச்சரின் ‘மிசா’ பேச்சு, உடல்மொழி அநாகரிகமானது” : விஜயிக்கு கே.பாலகிருஷ்ணம் கடும் கண்டனம்!

அவசரநிலைக் காலத்தில் நாட்டில் அரை சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது. அன்றைக்கு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. சிறைச்சாலைகள் கொடூரமான அடக்குமுறைக்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டன. பலர் உயிரிழந்தனர். மிசா தாக்குதலை நியாயப்படுத்துவதும், அந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர்களை கொச்சைப்படுத்துவது போல் முதலமைச்சர் பேசுவதும் வன்மையான கண்டனத்திற்குரியது. இதுபோன்ற கொடுமைகள் விஜய்க்கு நடந்தால், அவர் அரை மணி நேரம் தாங்குவாரா? இது அநாகரிகமானது; வன்மையான கண்டனத்திற்குரியது.

அமைதியான முறையில் மக்கள் போராட அனுமதி இல்லை. அப்படியான ஒரு மோசமான நிலை தவெக ஆட்சியில் நீடிக்கிறது. சட்டம்-ஒழுங்கு என்ற பெயரில் அனைவருக்கும் சமாதி கட்டுவதா?எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம். நாளை கூட்டணி தொடர்பாக கூட்டம் வைத்திருக்கிறார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்திற்குச் செல்லப் போவதில்லை. தேர்தலுக்கு முன்பாக பிரதமர் வேட்பாளரை முன்மொழிவது தவறானது. அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். தவெகவுக்குள் அமைச்சர்களிடையேகூட கொள்கை முரண்பாடு உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories