அரசியல்

ரூ. 1.30 லட்சம் லஞ்சம்.. வைரலான வீடியோ.. திசை திருப்பிய தவெக.. பின்னர் கைது நடவடிக்கை! - என்ன நடந்தது?

செங்கல்பட்டு, மாம்பாக்கம் ஊராட்சித் தலைவர், தவெக-வைச் சேர்ந்த வீரா என்பவர், ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ. 1.30 லட்சம் லஞ்சம்.. வைரலான வீடியோ.. திசை திருப்பிய தவெக.. பின்னர் கைது நடவடிக்கை! - என்ன நடந்தது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளராகவும் உள்ளவர் என்.வீரா (எ) வீராசாமி.

இவர், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் நவீன் என்பவர் பணி முடிந்தும் பில் நிலுவையில் இருந்ததாகவும், அதை அனுமதிக்க வீரா முதலில் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அந்தத் தொகை ரூ.1.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதி கூகுள் பே மூலம் அனுப்பப்பட்டதுடன், மீதமுள்ள தொகையை நேரில் வழங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வீரா என்பவர் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலானது.

வீராசாமி மீது கடந்த 2023-ம் ஆண்டு ஊராட்சி நிர்வாக முறைகேடு தொடர்பாக வார்டு உறுப்பினர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்திருந்ததும், பின்னர் அவரது காசோலை கையொப்ப அதிகாரம் ரத்து செய்யப்பட்டதாகவும், 2025-ம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் தலைவர் பதவியை இழந்த அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் அண்மையில் மீண்டும் தலைவர் பொறுப்பேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த வீடியோ வெளியான விவகாரம் குறித்து தவெக தலைமையும், மேடையில் வீர வசனம் பேசும் முதலமைச்சர் விஜயும் அமைதி காத்து வந்தனர். இந்த அமைதியை வழக்கம்போல் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் தங்களது அலப்பறைகளை ஆரம்பித்தனர்.

சமூக வலைதளம் முழுக்க இந்த வீடியோ AI எனவும், இது திமுக-வின் திட்டமிட்ட சதி என்றும், எங்கள் அண்ணனின் புனித ஆட்சியின் நற்பெயரைக் கெடுக்க சதி நடப்பதாகவும் கோயபல்ஸ் முறையை பயன்படுத்தி பொய்யை பரப்பத் தொடங்கினர்.

ரூ. 1.30 லட்சம் லஞ்சம்.. வைரலான வீடியோ.. திசை திருப்பிய தவெக.. பின்னர் கைது நடவடிக்கை! - என்ன நடந்தது?

இதை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட லஞ்சம் வாங்கிய வீரா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, அது கடன் தொகை, யாராவது இப்படி வெளிப்படையாக லஞ்சம் வாங்குவார்களா? இது தவெக என்ற கட்சிக்கும் அதன் தலைமைக்கும் வேண்டுமென்றே கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இது போன்று செய்கிறார்கள் என கூறுகிறார்.

மறுபுறம் நாடகத்தை ஆரம்பித்த தவெக தலைமை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் சி.வி. தினகரன் (எ) தீனா, மூலம் ஒரு கட்சி அறிக்கையை வெளியிட்டு, ‘கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் வீரா (எ) வீராசாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்’ எனக் தெரிவிக்கிறது. நேற்று (ஜூலை 15) இரவே வீரா லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்படுகிறார்.

இங்குதான் வெளிப்பட்டது விர்ச்சுவல் வாரியர்சின் முட்டுக் கொடுக்கும் திறமை. ஏற்கனவே இது AI, திமுக-வின் சதி எனக் கூறிவிட்டோமே. ஆனால், இப்போது வீரா என்பவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டார்கள். கைதும் செய்து விட்டார்கள் ஏன்? என்றெல்லாம் யோசிக்காமல், மீண்டும் ரீல்ஸை எடுத்து, இதுதான் தவெக ஆட்சி. யார் தப்பு செய்தாலும் நடவடிக்கை பாயும். அதுதான் முதல்வர் விஜய் என தங்களது ரீல்ஸ் திறமையை போட்டி போட்டு நிரூபிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதுகுறித்து கேள்வி கேட்பவர்களுக்குக் கூட, எதுவும் பேசாதீர்கள். தவெக ஆட்சி என்றால் இப்படித்தான். உடனடியாக நடவடிக்கை பாயும் என கதையளக்க தொடங்கினார்கள்.

அவர் லஞ்சம் வாங்கியது, அது தலைமைக்குத் தெரிந்தது, விர்ச்சுவல் வாரியர்ஸ் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் பொய்யை பரப்பியது எல்லாமே உண்மையாகிவிட்டது. இந்த ஆட்சியின் நிலையும் இதுதான்.

இப்படி ஒவ்வொரு உண்மையாக வெளி வரும்போது விரைவில் அனைத்தும் மக்களுக்கும் தெரியவரும். அப்போது நல்லவர் போல வேடமிடும் முதலமைச்சரின் விஜய் அரசின் நிர்வாகத் திறமையின்மையும் வெளிப்படும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

banner

Related Stories

Related Stories