
விஜய் தலைமையிலான தவெக, ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு குற்றச்சம்பவங்களை விஜய் கட்சியினரே தைரியமாக செய்து வருகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கஞ்சா போதை விற்பனை, கொள்ளை, கொலை என பல்வேறு குற்றச்சம்பவங்களில் தவெக-வினரே ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை காவல்துறையும் கண்டும் காணாததுமாய் இருந்து வருகிறது. இனி ஒரு தவறும் நடக்க விட மாட்டேன் என்று விஜய், ஒவ்வொரு மேடையிலும் பேசி வரும் சூழலில், முன்பு இருந்ததை விட குற்றச்சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. போலீசில் புகார் கொடுத்தாலும் அதனை அவர்கள் ஏற்காமல், பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வேதாரண்யம் அருகே காவல் நிலையம் முன்பு வாகனத்தில் சென்ற நபரிடம் செயின் பறிப்பு செய்த தவெக ஊராட்சி மன்ற செயலாளரை கைது செய்யாமல் காவல்துறையினர் இழுத்தடிப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு பகுதியில் கோபி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்த சூழலில் இவர் நேற்று (ஜூலை 15) வாய்மேடு காவல் நிலையத்தின் மிக அருகே வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த தவெக ஊராட்சி செயலாளர் அபிஷேக் அவரிடம் வம்பிழுத்துள்ளார்.
அதோடு கோபி கிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய தவெக ஊராட்சி செயலாளர் அபிஷேக், அவரிடம் இருந்த பவுன் தங்க செயினையும் பறித்து விட்டு தப்பியோடியுள்ளார். இதனால் பெரும் பதற்றமடைந்த கோபி கிருஷ்ணன், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் புகாரை பெற மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபி கிருஷ்ணனுக்கு ஆதரவாக அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் கூடி, வழக்குப்பதிவு செய்ய போலீசாரை வற்புறுத்தினர். இதையடுத்து பொதுமக்களை சமாதப்படுத்திய காவல்துறையினர், பாதிக்கப்பட்ட நபரின் புகாரை பெற்றுக்கொண்டு, தவெக நிர்வாகி அபிஷேக் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
தவெக ஆட்சியில் பல்வேறு வழிகளில் பொதுமக்கள் பெருமளவு சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பாதுகாப்பு தொடர்பாக போலீசார் கவனக்குறைவாக இருப்பது, விஜய் ஆட்சியில் பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாக்கும் அவல நிலை உருவாகியுள்ளது.






