
கரூர் அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர் விஜயபாஸ்கர் இன்று (ஜூன் 29) சபாநாயகர் ஜே.சி.டி பிரகாரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏ-க்களான அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமாரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, ஜெயக்குமார், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் இந்த தொடர் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் விரைவில் த.வெ.க.வில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தவெக-வின் முதலமைச்சர் விஜய் குதிரை பேர அரசியலை தொடர்வாதாகவே சந்தேகம் எழுகிறது.
தனது ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லை என்பதை தெரிந்தும், தொடர்ந்து மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ-க்களை ஆசை வார்த்தை கூறியும் பதவி தருவதாகவும் அழைத்து இதுபோன்று எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ய வைக்கிறார்களா? என சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,
”மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என பதிவிட்டுள்ளார்.
எம்.ஆர் விஜயபாஸ்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டு விட்டதால் விரைவில் தொகுதி காலியாக உள்ளதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இதன்மூலம் தற்போது தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.






