அரசியல்

“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”

சென்னை, திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் நாற்காலியில் அமர்ந்து தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் எடுத்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

சென்னை, திருவெற்றியூரில் சட்டமன்ற உறுப்பினர் நாற்காலியில் அமர்ந்து போட்டி போட்டு ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகிகளின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையம், பள்ளிக்கூடங்கள், மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் த.வெ.க-வினர் தொடர்ந்து ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 25) திருவொற்றியூரில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் என். ஆனந்த் திறந்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட திருவொற்றியூர் த.வெ.க நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர் நாற்காலியில் மாறி மாறி அமர்ந்து வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுத்துக் கொண்டனர். பெண் நிர்வாகிகள் செய்த இந்த செயலின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகிறது.

“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”

அரசியலுக்கு புதிதாக வந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் உடன் இருக்கும் கட்சித் தொண்டர்கள் ஏற்கனவே இது போன்ற வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது வாடிக்கையாக உள்ள நிலையில், தொடரும் இந்த சம்பவங்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் இருக்கையில் அமர்ந்து கொண்டு இது போன்று ரீல்ஸ் எடுப்பது எத்தகைய செயல் எனவும், இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் பயிற்சி அளித்தால் போதாது கட்சியினருக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இதுபோன்ற செயலில் ஈடுபடும் த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் தமிழ்நாடு சீரழிந்து போகும் கூடிய நிலை உள்ளது என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories