அரசியல்

“முதலமைச்சர் கேட்கிறார்... சபாநாயகரும் ‘ஆ... Action’ என்கிறார்!” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

“தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும், தி.மு.க மீது பழிப் போடுவதையே பழக்கமாக வைத்திருக்கிறது த.வெ.க அரசு.”

“முதலமைச்சர் கேட்கிறார்... சபாநாயகரும் ‘ஆ... Action’  என்கிறார்!” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி, அதன் மீதான விவாதம் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது.

நேற்றைய நாள் (ஜூன் 22) ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு ஆக்கப்பூர்வ கருத்துக்களையும், அரசின் நிர்வாகத் தோல்வியையும் எடுத்துரைத்தார். அப்போது, 5 முறைக்கு மேல் சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் குறுக்கீடு செய்து பதிலளித்தனர்.

இந்நிலையில், ஆளுநர் உரை மீதான பதிலுரை வழங்க, இன்று (ஜூன் 23) முதலமைச்சர் விஜய்க்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அந்நேரத்தில் விமர்சனங்களுக்கு பொறுப்பேற்று பதிலளிக்காமல், தனது சினிமா பாணி அடுக்குமொழிப் பேச்சுகளை கட்டவிழ்த்துவிட்டார் முதலமைச்சர் விஜய்.

அந்த அடுக்கு மொழிப் பேச்சுகள் அவதூறாக உருவெடுத்த நிலையில், அதற்கு எதிர்க்கட்சியினர் பதிலடி தர குறுக்கிட்டபோது, எதிர்க்கட்சியினர் பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையை எதிர்க்கட்சியினர் புறக்கணித்து வெளியேறினர். தொடர்ந்து பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து,

“முதலமைச்சர் கேட்கிறார்... சபாநாயகரும் ‘ஆ... Action’  என்கிறார்!” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

“தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும், தி.மு.க மீது பழிப் போடுவதையே பழக்கமாக வைத்திருக்கிறது த.வெ.க அரசு.

பிரச்சாரங்களில் பேசுவதுபோல், சட்டப்பேரவையிலும் சினிமா பாணியில் பேசி வந்த முதலமைச்சர், சில உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்தபோது, Point of Order-ல் அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நான், நேற்று பேசும்போது பல முறை குறிக்கிட்டார்கள்.

நான் சட்டப்பேரவையில் முதலமைச்சரைப் பார்த்து பல கேள்விகளை முன்வைத்தேன். ஆனால், அவர் எதற்கும் பதிலளிக்கவில்லை. மாறாக, பல அமைச்சர்கள் எழுந்து நின்று, என் உரையை குறுக்கிட்டு சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று முதலமைச்சர் உரையின்போது எங்களுக்கு குறுக்கிட்டு பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

முதலமைச்சர் இன்றைக்கு எடுத்துவந்த முழு Script Dialogue-ஐயும் பேசி முடிப்பதுவரை யாரும் Cut சொல்லக்கூடாது என்ற மனநிலையில், இன்றைக்கு சட்டமன்றத்தை படப்பிடிப்பு தளமாக மாற்றிவிட்டார்.

முதலமைச்சர் அவர்களே... மாற்றம் என்று சொன்னீர்களே.. ஒரே நாளில் அனைத்தையும் கிழித்து எறிந்துவிடுவேன் என்றீர்களே... இந்த 40 நாட்களில் உங்களின் காவல்துறை என்ன செய்திருக்கிறது? நூற்றுக்கணக்கான குற்றங்கள் நடந்துவருகிறது. ஆளுங்கட்சியினரே குற்ற சம்பங்களில் ஈடுபடுகிறார்கள்.

குடியரசுத் தலைவருக்கு என்று Protocol இருக்கிறது. ஆனால், ஆளுநருக்கு அப்படி எதுவும் கிடையாது. இதுகூட முதலமைச்சருக்கு தெரியாதா?

“முதலமைச்சர் கேட்கிறார்... சபாநாயகரும் ‘ஆ... Action’  என்கிறார்!” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

முதலமைச்சரிடம் ஊடகங்களும், செய்தியாளர்களும் தொடர்ந்து கேள்விகள் எழுப்ப முயற்சி செய்து வருகிறீர்கள். ஆனால், உங்களுக்கும் பதில் இல்லை, எங்களுக்கும் பதில் இல்லை.

இசை வெளியீட்டு விழா மற்றும் பிற திரை வெளியீட்டு விழாக்களில் கடைப்பிடித்த பாணியை, சட்டப்பேரவையிலும் தொடர்கிறார் முதலமைச்சர். சினிமா அரங்கம் போல், சட்டப்பேரவையில் விசில் எல்லாம் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள். இனி வரும் காலங்களில் பாட்டுப்போட்டு நடனம் ஆடக் கூட வாய்ப்பிருக்கிறது.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரையை வைத்து 10 ரீல்ஸ் வெளியிடலாம். அதற்கு ஏற்றதுபோல், திட்டமிட்டுதான் செய்கிறார்கள். இது நாங்கள் எதிர்பார்த்ததுதான். ஆனால், மிகவும் நடிக்க ஆரம்பித்தவுடன் எங்களாலேயே பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இனி சட்டப்பேரவையில் Action, Cut, One More என்ற வார்த்தைகளெல்லாம் இனி கேட்கும் என நினைக்கிறேன்

தனது பேச்சின் இறுதியில் Action செய்யலாமா என முதலமைச்சர் கேட்கிறார்... சபாநாயகரும் ‘ஆ... Action’ என்கிறார். இனி கேரவன்கூட சட்டமன்றத்திற்கு வரலாம்.

முதலமைச்சர் விஜய்க்கு Director தேவைப்படுகிறார். அப்படிப்பட்ட Director-ஆக சபாநாயகர் இருக்கிறார். Asst.Directors-ஆக அமைச்சர்கள் இருக்கிறார்கள்.”

banner

Related Stories

Related Stories