அரசியல்

“குட்டிக்கதையா.. கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்!” - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

சட்டப்பேரவையில் இன்று பதிலுரை என்ற பெயரில் script-ஐ வாசித்த முதலமைச்சர் விஜய், முதலமைச்சருக்குரிய மாண்பை மறந்து உளறிக் கொட்டியிருக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்.

“குட்டிக்கதையா.. கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்!” - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சரின் மாண்புகளை மறந்து அவதூறுகளை அள்ளி வீசி, உரையாற்றிய ரீல்ஸ் முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்ததோடு சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.

பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.

முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,

“குட்டிக்கதையா.. கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்!” - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.

எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.

குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.

செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.

ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது முதலமைச்சர் ஆக நடந்து கொள்ள வேண்டும்.

banner

Related Stories

Related Stories