அரசியல்

175 இல்லை - 176 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் களம் காணும் வேட்பாளர்கள்! : முழு விவரம் உள்ளே!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் 176 வேட்பாளர்கள் ‘உதயசூரியன்’ சின்னத்தில் களம் காண உள்ளனர்.

175 இல்லை - 176 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் களம் காணும் வேட்பாளர்கள்! : முழு விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் வெற்றிகரமான 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியை நிறைவு செய்துவிட்டு, திராவிட மாடல் 2.O அரசை நோக்கி வீருநடைப்போட்டு வருகிறது தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு ஏப்.23 அன்று ஒரே நாளில் நடைபெறவுள்ளதையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தோழமைக் கட்சிகளுக்கு உரிய சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தி.மு.க நேரடியாக 164 தொகுதிகளிலும், மீதமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ், தே.மு.தி.க, வி.சி.க, பொதுவுடைமைக் கட்சிகள், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன என்ற அறிவிப்பையும் முறையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து 175 தொகுதிகளில் தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ‘உதயசூரியன்’ சின்னத்திலும், பிற இடங்களில் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் களம் காண்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

175 இல்லை - 176 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் களம் காணும் வேட்பாளர்கள்! : முழு விவரம் உள்ளே!

அதில், ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் 3-ல் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இன்றைய நாள், அந்த ஒரு தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்திலேயே ம.தி.மு.க போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, “2026, ஏப்ரல் திங்களில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான சீர்காழி (தனி) தொகுதியிலும் கழக வேட்பாளர் வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.”

இந்த அறிவிப்பிற்கு பிறகு, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் 176 வேட்பாளர்கள் ‘உதயசூரியன்’ சின்னத்தில் களம் காண உள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories