அரசியல்

தேர்தல் ஆணையத்தின் SIR... பாஜக, அதிமுக தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு !

தேர்தல் ஆணையத்தின் SIR... பாஜக, அதிமுக தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பல லட்சம் பேரில் வாக்குரிமையைப் பறித்த பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) அடுத்ததாக தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இதனிடையே இன்று, தலைமைச் செயலகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் SIR... பாஜக, அதிமுக தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு !

கூட்டம் முடிந்தபின்னர் இது குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் SIR நடைபெறும் என்ற அறிவிப்பை அவசர கதியில் வெளியிட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும்.

அதே போல டிசம்பர் இறுதியில் இருந்து ஜனவரி தொடக்கம் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதால், ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றிருப்பார்கள். இப்படியாக உள்நோக்குத்துடன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories