அரசியல்

"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !

"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2024 தேர்தல் நேரத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பாஜக மற்றும் அதன் தலைவர்களை குறிப்பிட்டு விமர்சித்தார். இது குறித்து தெலுங்கானா மாநில பாஜக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் அளவு புகாரில் எதுவும் இல்லை என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனை எதிர்த்து இதனை எதிர்த்து பாஜக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பீ.ஆர்.கவாய் அமர்வு பாஜக நீதிமன்றத்தை அரசியல் சண்டைகளுக்கு பயன்படுத்துவதற்கு எச்சரிக்கை விடுத்தது.

மேலும், அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம் என்று கூறிய அவர், நீங்கள் ஒரு அரசியல்வாதியாக இருந்தால் விமர்சனங்களை எல்லாம் தாங்கிக் கொள்ளும் வலிமையான திறமை உங்களிடம் இருக்க வேண்டும் என்று கூறி பாஜக மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories