இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 31) நாடாளுமன்றத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,
“சிறு தொழில்களுக்கு ஒதுக்கீடு செய்த நிதியை வழங்காதது ஏன்?” என மக்களவையில் கலாநிதி வீராசாமி கேள்வி!
மைக்ரோ மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நம்பிக்கை நிதி(CGTMSE) மற்றும் பல முக்கிய MSME திட்டங்கள் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியை குறைவாகப் பயன்படுத்தியதன் காரணங்கள் கேட்டு திமுக வட சென்னை திமுக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்படியானால், 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் CGTMSE மற்றும் பிற முக்கிய MSME திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட, வெளியிடப்பட்ட மற்றும் உண்மையில் பயன்படுத்தப்பட்ட நிதியின் விவரங்கள் என்ன?
ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் சரியான நேரத்திலும் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும், நுண் மற்றும் சிறு தொழில்முனைவோர் மத்தியில் இந்தத் திட்டத்தின் கடன் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கான விழிப்புணர்வு, மக்களைச் சென்றடைதல் மற்றும் எளிதாக்குவதை மேம்படுத்துவதற்கும் அமைச்சகம் எடுத்து வரும் திருத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
“உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு புதிய மானியத் திட்டங்கள்” அறிமுகப்படுத்துவது குறித்து பெரம்பலூர் திமுக எம்.பி. அருண் நேரு கோரிக்கை
சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய அலகுகள் உட்பட பல்வேறு அளவிலான உணவு பதப்படுத்தும் தொழில்களை (FPI) ஆதரிக்க அரசாங்கம் புதிய மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து திமுக மக்களவை உறுப்பினர் அருண் நேரு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு,
குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்தத் திட்டங்களின் மொத்த ஒதுக்கீடு மற்றும் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் என்ன?
பழங்கள், காய்கறிகள் மற்றும் அழுகக்கூடிய பொருட்களின் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கும், அவற்றின் ஆயுளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் எடுத்த குறிப்பிட்ட நடவடிக்கைகள் என்ன?
உலக உணவு இந்தியா போன்ற நிகழ்வுகள் மூலம் முதலீடு மற்றும் உலகளாவிய கவனத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்முயற்சிகளை எடுத்திருந்தால் அதன் விவரங்கள் என்ன?
இந்தத் திட்டங்கள் மதிப்பு கூட்டலை மேம்படுத்துதல், உணவு வீணாவதைக் குறைத்தல் மற்றும் இந்தியாவை ஒரு முன்னணி உணவு பதப்படுத்தும் இடமாக ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தபடும் நடவடிக்கைகள் என்ன?