தோட்டக்கலை, மரங்களை இடமாற்றம் செய்தல், அழகுபடுத்தல் மற்றும் பராமரிப்பு ஆகியவைகளை உள்ளடக்கிய பசுமை நெடுஞ்சாலைகள் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? என நாடாளுமன்றத்தில் ஆரணி திமுக எம்.பி. தரணிவேந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் மற்றும் நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை விவரங்கள் என்ன?கார்பன் பிரித்தெடுத்தல், காற்றின் தர மேம்பாடு மற்றும்பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இதுவரை அடையப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூக நன்மைகள் என்ன?
நெடுஞ்சாலைகளில் பசுமைப் போர்வையை செயல்படுத்துவதிலும் பராமரிப்பதிலும் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? பசுமை நெடுஞ்சாலைகள் முயற்சியில் நிலைத்தன்மை மற்றும் சமூக பங்கேற்பை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
உணவு பதப்படுத்தும் தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பு
உணவு பதப்படுத்தும் தொழில் (FPI) மூலம் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக அரசாங்கத்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மற்றும் செயல்பாடுகள் என்ன? தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களின் விவரங்கள்?நடப்பு ஆண்டில் உணவு பதப்படுத்தும் துறைக்கு அரசு வழங்கிய நிதி எவ்வளவு? பல்வேறு திட்டங்களுக்கு அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட மானியங்களின் விவரங்கள் என்ன? என மக்களவையில் பொள்ளாச்சி தொகுதி திமுக எம்.பி. ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.