அரசியல்

தொகுதி மறுவரையறை மாநிலங்களை பாதிக்கும் : உண்மையை ஒப்புக் கொண்ட ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!

தொகுதி மறுவரையறை மாநிலங்களை பாதிக்கும் என ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஒப்புக்கொண்டுள்ளார்.

தொகுதி மறுவரையறை மாநிலங்களை பாதிக்கும் : உண்மையை ஒப்புக் கொண்ட ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தில் தொகுது மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பி. பி. வில்சன், மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத் தொடரின் போது, உரையாற்றி இருந்தார். இதற்போது இவரது உரைக்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார்.

அதில் தொகுதி மறுவரையறை மாநிலங்களை பாதிக்கும் என்பதை ஒப்புக்கொண்டார். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னரே, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் இடங்களை மறுசீரமைப்பதற்கு தொகுதி மறுவரையறை ஆணையம் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகுதான் தொகுதி மறுவரையறை ஆணையம் நிறுவப்படும், எனவே அதன் அடிப்படையை அப்போதுதான் விவாதிக்க முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் இல்லாத நிலையில் தொகுதி மறுவரையறையின் விளைவை ஊகிப்பது பொருத்தமானதாக இருக்காது.

ஒன்றிய சட்டத்துறை அமைச்சரின் இந்த பதில் தம்ழிநாடு முதலமைச்சர் அவர்கள் முன்கூட்டியே எழுப்பிய கேள்விகளை ஆதரிக்கிறது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளதால், 2026 வரை அரசியலமைப்பில் இட ஒதுக்கீட்டில் தற்போதுள்ள நிலை இயற்கையாகவே முடிவுக்கு வரும், இது தொகுதி மறுவரைக்கான சாத்தியத்திற்கு வழிவகுக்கும். இதன் விளைவாக, மாநிலங்களின் அரசியல் அதிகாரம் குறையும்.

banner

Related Stories

Related Stories