சென்னை கிழக்கு மாவட்டக் கழகத்திற்கு உட்பட்ட துறைமுகம், எழும்பூர் சட்டமன்றத் தொகுதிகளின் BLA-2, Booth Level Digital Agents மற்றும் பாக அளவிலான இளைஞரணியினருக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 24) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகளையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து உரையாற்றியது பின்வருமாறு,
நம் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்களால், மக்கள் பெரும்திரளாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் இணைந்து வருகின்றனர். இதனைக் கண்டு பொறுத்துக்கொள்ளாத துரோகக் கூட்டணியை விரட்டியடிப்பது நம் கடமையாக மாறியுள்ளது.
“இந்த தேர்தல் இல்லை, 2035 தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம்” என தெரிவித்தவர் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு, 4 கார் மாறி ஒளிந்து மறைந்து போய் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கிறார். இந்த துரோக கூட்டணியை வீழ்த்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாசிச பா.ஜ.க.வோடு இன்று அ.தி.மு.க அடிமைக்கூட்டம் கூட்டணி வைத்துள்ளது. சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமி control-ல் கூட்டணி மட்டுமல்ல, அ.தி.மு.க.வே கிடையாது. இது போன்ற அடிமைகளையும், பாசிஸ்டுகளையும் நாம் நிச்சயம் வீழ்த்த வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி அவர்களே, நாங்கள் அமித்ஷா வீட்டு கதவையோ, கமலாலயம் கதவையோ திருட்டுத்தனமாக போய் தட்டவில்லை. எங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் நலத்திட்டங்களை செய்திருக்கிறோம் என்ற உரிமையுடன் தைரியமாக மக்களை சந்தித்து வருகிறோம்.
Missed call கொடுத்து கட்சியில் ஆட்களை சேர்க்கும் கட்சி நாம் கிடையாது. சொந்த காலில் நிற்கும் கட்சி தி.மு.க. தேர்தலுக்கான நாம் உறுப்பினர்களை சேர்க்கவில்லை. தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்போடு பொதுமக்களை உறுப்பினர்களாக நம் கழகத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறோம். இதனைக் கூடுதல் முனைப்போடு தொடர்வோம்.
இவ்வேளையில் நம் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக மிக நலமுடன் உள்ளார். மருத்துவர்களின் மருத்துவத்தினால் மட்டுமல்ல, மக்கள் மற்றும் கழகத்தினரின் பேரன்பினால் தலைவர், இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.