அரசியல்

“இந்துத்துவ சனாதன சக்திகளுக்கு துணைபோகும் NCERT பாடத்திட்டம்!” : வைகோ கண்டனம்!

“இந்துத்துவ சனாதன சக்திகளின் திட்டப்படி நாட்டின் பன்முகத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையையும் சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு என்.சி.இ.ஆர்.டி துணை போவது கடும் கண்டனத்துக்குரியது.”

“இந்துத்துவ சனாதன சக்திகளுக்கு துணைபோகும் NCERT பாடத்திட்டம்!” : வைகோ கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய பா.ஜ.க அரசு, தமது கொள்கையாகவே முன்னிறுத்தி செயல்படுத்திவரும் நிலையில், கல்வியிலும் காவிமயம் பரப்பப்பட்டு வருகிறது. அதற்கு பா.ஜ.க பயன்படுத்தும் கருவியாக NCERT விளங்கி வருகிறது.

இது குறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள CBSE மாணவர்களுக்கான 7 ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தானிய ஆட்சி பற்றிய குறிப்புகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.

“இந்துத்துவ சனாதன சக்திகளுக்கு துணைபோகும் NCERT பாடத்திட்டம்!” : வைகோ கண்டனம்!

‘நமது கலாச்சார பாரம்பரியம் மற்றும் அறிவு மரபுகள்’, ‘ஆட்சி மற்றும் ஜனநாயகம்’ மற்றும் ‘நம்மைச் சுற்றியுள்ள பொருளாதார அறிவு’ போன்ற தலைப்புகளும், குப்தர்களின் காலம்: முடிவில்லா படைப்பாற்றலின் காலம், பேரரசுகளின் எழுச்சி உள்ளிட்ட பாடங்களும் இடம்பெற்றுள்ள புத்தகத்தில், திட்டமிட்டு முகலாயர்கள் பற்றிய குறிப்புகால் நீக்கப்பட்டுள்ளன.

மேலும், NCERT-ன் 7,8ஆம் வகுப்பு பாடப்புத்தக்ககங்களில் “மக்களை கொன்று குவித்த ஒரு மிருகத்தனமான மற்றும் இரக்கமற்றவர் பாபர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “அவுரங்கசீப் கோயில்களையும், குருத்வாராக்களையும் அழித்த ராணுவ ஆட்சியாளர்” என்றும், “அக்பரின் ஆட்சி கொடூரமானது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுபோன்று, இந்துத்துவ சனாதன சக்திகளின் திட்டப்படி நாட்டின் பன்முகத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையையும் சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு என்.சி.இ.ஆர்.டி துணை போவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, உடனடியாக பாடப்புத்தகங்களில் இருந்து இத்தகைய கருத்துக்களை நீக்க வேண்டும்.”

banner

Related Stories

Related Stories